பக்கம்:பொங்கற்பரிசு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆள்வமெனச் சொல்லே!


பொன்னுலையைக் கீழ்வானில் இளம்பரிதிக் கொல்லன்
புலர்காலை மூடிவிட்டான்! பனிப்போர்வை நீக்கித்
தன்னுடலின் அழகெல்லாம் நீர்ப்பரப்பில் வானம்
சரிபார்த்துக் கொண்டிருக்கும்; பூச்சிரிக்கும் பொய்கை;
மின்னிடையார் விழிவண்டு கள்வெறியிற் பாடும்;
மேனிதரும் நாற்றத்தை நொச்சிப்பூ வீசும்
நன்னாளில், நற்பொங்கல் திருநாளில், தம்பி!
'திராவிடத்தைத் திராவிடரே ஆள்வ'மெனச் சொல்லே!

1


தோய்ந்திருக்கும் நற்பசுமை வயற்காட்டில்; பூத்த
செங்கரும்புத் தோட்டமோ மணல்மேடாய்த் தோன்றும்;
மேய்ந்திருக்கும் பசுமாடு; கிழக்காளை காதல்
வெறியூட்டும்; பொறுக்காத இளங்காளை பாயும்;
சாய்ந்திருக்கும் கிளையிருந்து குழலூதும் பையன்;
தனைமறந்து புள்ளிசைக்கும் நற்பொங்கல் நாளில்,
தேய்ந்திருக்கும் நம்மினத்தின் நிலையுயர்த்தத், தம்பி!
'திராவிடத்தைத் திராவிடரே ஆள்வ'மெனச் சொல்லே!

2


கண்ணிட்ட செங்கரும்பின் மேற்றோலை நீக்கிக்
கத்துகின்ற சிறுபிள்ளைக் களித்துநகை காட்டிப்
பண்ணிட்ட செவ்வாயர் மருதநிலப்பெண்
பாலோடு குங்குமப்பூ ஏலத்தை சேர்த்து

40
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/48&oldid=1148521" இலிருந்து மீள்விக்கப்பட்டது