பக்கம்:பொங்கற்பரிசு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பங்கிடுவோம் !

ங்கத்திலே வார்த்தெடுத்த
தட்டைப்போலே செம்பரிதி
இங்கெழுந்தான் ! வாழ்கதமிழ்ப் பொங்கல் -நமக்கு
இன்றலவோ வந்ததுதைத் திங்கள் ! 1


கங்குலைக் கிழித்தெறிந்து
கார்குளிரை வெட்டிவீழ்த்தி
எங்கும்ஒளி பாய்ச்சுகின்றான்: பொன்னே! -வளர்
இன்பமின்பம் இன்பமின்பம் என்னே! 2


செங்கரும்பு வெட்டிவந்து
செய்யில்நெல் லறுத்துவந்து
பொங்கிடுவோம் புத்தம்புதுப் பொங்கல்! -நாம்
யாவருக்கும் பங்கிடுவோம் பொங்கல்! 3


மங்கையரும் கன்னியரும்
வாய்குளிரத் தமிழ்பாடி
மங்கல விழாவெடுப்போம்; வாரீர்! - தமிழ்ப்
பொங்கலுண்டு ஆடிடுவோம் ; சேரீர்! 4


சங்கெடுத்து ஊதிடுவோம்!
தமிழ்முரசம் ஆர்த்திடுவோம்!
சிங்கத்தமிழ்ப் பெண்களடி நாமே! - இன்று
திராவிடத்தை நீடுவாழ்த்து வோமே! 5

45
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/53&oldid=1146490" இலிருந்து மீள்விக்கப்பட்டது