பக்கம்:பொங்கற்பரிசு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நாம் பணியோம்!

ம்நாட்டைத் தாய்நாட்டைத் திராவிடத்தை இந்நாள்
நலித்துவந்த வடகாற்றைப் பகைக்குளிரை வீழ்த்தி
அம்பொன்னாம் புதுப்பரிதி அதோவந்தான்; வாழ்க!
அடலேற! கொல்புலியே! திராவிடனே! தம்பி
நம்நாடு நம்மதடா! நமையாள எண்ணும்
நாடோடி வடவருக்கு நாம்பணிய மாட்டோம்!
சும்மாநாம் இருப்பதுவோ! திராவிடத்தை மீட்கத்
துடித்தெழுவோம்; கதிர்வாழ்த்தித் தோள்குலுக்கு

[வோமே!


தமிழ்க்கதிர் வாழ்க!

லைகடல் மீது பனித்திரை கிழித்தே
அழகொளி எழுந்தது கீழ்வான்!
தலைக்கதிர் வாழ்க! தமிழ்க்கதிர் வாழ்க !
தழைத்திடச் செய்கதிர் வாழ்க!
மலையிடைப் பச்சை! மரத்திடைக் கூடு!
வயலிடை அறுவடைப் பாட்டாம் !
உலையிடைப் பொங்கல்! ஊரிடைக் கூத்து!
வாயிடைப் பொங்கலின் வாழ்த்தே !

48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/56&oldid=1147035" இலிருந்து மீள்விக்கப்பட்டது