பக்கம்:பொங்கற்பரிசு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஒளிச்சுடர் வாழ்க!

ழுந்தது பரிதி ! கீழ்க்கடல் வானம்

இருட்புதர் நீள்கழி யாவும்
இழிந்தது பைம்பொன் ! ஒளிச்சுடர் வாழ்க!
இங்குள திராவிடர் இல்லில்
வழிந்தது பொங்கல் வாழிய என்றும் !
மலரடிக் கன்னியர் நெஞ்சில்
அழுந்திய மகிழ்ச்சி; ’பொங்கலோ பொங்கல் !
அளவிடக் கூடுத லுண்டோ ? 1


வயலிடைச் செங்நெல்; வழியெலாம் பூக்கள் ;
மதகிடைப் புதுப்புனல் ஓசை;
பெயலிடை பட்ட கழையெலாம் கணுக்கள் ;
பின்னிய கூந்தலில் முல்லை ;
அயலிடைத் தோப்புக் கிளையெலாம் கனிகள் ;
அரிவையர் கையெலாம் கரும்பு ;
மயலிடைப் பட்ட காளையர் நெஞ்சில்
வாழ்த்தொலி வாழிய பொங்கல்! 2


பொன்னென எங்கும் மலைப்பொதி சம்பா
பூசுணி மாபலா வாழை
மன்னிய இல்லம்; வாழிய பொங்கல்!
மங்கையர் உளத்தினில் இன்று
’தென்னவர்: ஆம்; நாம் ! திராவிடர்; அஞ்சாச்
சிறப்புடை மக்களாம்! என்ற
பின்னிய நினைப்பு வளர்ந்தது; வாழ்க !
பிறிதினி அடைவது நாடே! 3

51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/59&oldid=1147459" இலிருந்து மீள்விக்கப்பட்டது