பக்கம்:பொங்கற்பரிசு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தைத் திங்கள் வாழ்க!


ளங்கதிர் தொடுவா னத்தே
எழுந்தது! வாழ்க! மக்கள்
உளமெலாம், உடல மெல்லாம்
உவகையின் ஆட்சி! மேட்டுக்
களமெலாம் செந்நெல்! பொய்கைக்
கரையெலாம் அலைமு ழக்கம்!
வளமெலாம் பெருக்கி - இன்று
வந்த தைத் திங்கள் வாழ்க 1


புத்தொளி விண்ணில் எங்கும்
புகுந்தது! புகுந்த தின்பம்!
கொத்தெலாம் காய்கள்! வீட்டுக்
கூரையின் மேலும் காய்கள்!
எத்திசை எதிர்ப்பட் டாலும்
பழக்காடு! பூச்சி ரிப்பே!
புத்தாண்டின் முதல்நாள் இன்பப்
பொன்னாளை வாழ்த்தாய் தம்பி!2

1
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/9&oldid=1148981" இலிருந்து மீள்விக்கப்பட்டது