பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

E-cont.

Embossing : எழும்பிய அச்சிடும் முறை.

Enamelled paper : வழு வழுப்புத்தாள்.

Etching : அரிப்பு படிமம்.

F

Face : எழுத்து உருவ அமைப்பு, அச்செழுத்தின் முகப்பு.

Feed board : காகித அணைப்புப் பலகை.

Feeder : காகிதம் அணைப்போன், காகித அணைப்பு பொறி.

Feeding : காகிதம் அணைத்தல்.

Folio : பாதித்தாள், பக்க எண்.

Foot note : அடிக்குறிப்பு.

Fore-edge : முன் ஓரம்.

Format : புத்தக வடிவமைப்பு.

Forme : முடுக்கிய அச்சுப்படிவம்.

Fount of type : இன அச்செழுத்துத் தொகுப்பு.

Frame : அச்சறை தாங்கி.

Frontispiece : முகப்புப் படம்.

Furniture : அகல மாச்சக்கை, அடைப்பான்.

G

Galley : அச்சுத்தட்டு.

Galley rack : அச்சுத்தட்டுத் தாங்கி.

Gathering : மடித்த படிவச் சேர்க்கை .

H

Half title : உள் தலைப்பு, பாகத் தலைப்பு.

Half-tone block : நுண்புள்ளி சித்திரப் படிமம்.

Hard press : புத்தக அழுத்தி.

Heading : தலைப்பு.

Holt-tone process : புகைப்பட நுண்புள்ளி அரிப்பு முறை.

House style : அச்சக வேலைப்பாணி; அச்சக விதித் தொகுதி.

I

Imposing; Imposition : பக்கப் படிவப்படுத்தல்; அச்சுப் படிவம் அமைத்தல்.

Imposing stone : படிவம் அமைக்கும் பரப்பு.

Impression : அச்சுப் பதிவு, அச்சழுத்தம், பதிப்பு.