பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

S-cont.

Serif : எழுத்தின் பாதக்கோடு.

Shooting stick : படிவ ஆப்புச் செலுத்தி.

Stabbing Side stitching : பக்கங்குத்தித் தைத்தல்.

Signature : படிவ அடையாளக்குறி, வால்குறி.

Solid plate : முழுப்பரப்பு அச்சுப் படிமம்.

Sorts : சில்லறை அச்செழுத்துக்கள்.

Space : இடம் நிரப்பி

Stereo ; Stereo plate : படி வார்ப்புப் படிமம்.

Stereotyping : படிவார்ப்புப் படிம முறை.

Stick : அச்சுக் கோப்பான், அச்செழுத் தடுக்கும் கருவி.

Style of the house: அச்சகவேலைப்பானி, அச்சக விதித் தொகுப்பு.

T

Table work; Tabular composition : அட்டவணை அச்சுக் கோப்பு.

Tabular matter : அட்டவணை அச்சுத் தொகுப்பு.

Title page : தலைப்புப் பக்கம்.

Tricolour printing : மூவண்ண அச்சுப்பதிப்பு; மூவண்ண அச்சடிப்பு வேலை.

Type : அச்செழுத்து.

Type casting machine : அச்செழுத்து வார்ப்புப் பொறி.

Type face : அச்செழுத்து முகப்பு, அச்சு முப்பு.

Type founding : அச்சுவார்ப்பட முறை.

Type high gauge : அச்செழுத்து உயர அளவி.

Type matter : அச்சுத் தொகுப்பு.

Type setting : அச்சுக் கோப்பு.

Typographer : அச்சுத் தொகுப்பு திட்ட அமைப்பாளர்.

Typography : அச்செழுத்து நுண்கலை.

W

Wood Engraving : மரச் செதுக்குப் படிமம்.

Wrong Fount : மாற்று இன அச்செழுத்து.