பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போன்னியின் தியாகம் #3 லாம். நாட்டிற்கு முன்னலே தாய் தந்தை, கணவன் மனைவி யாரும் பெரியவரல்ல-நாடுதான் பெரிது. • * * நாகன் : அம்மா-அதோ...அப்பா வந்துவிட்டார். அப்பா, அம்மாதான் சேரநாட்டு அரசனம்-நான் அம்மாவைச் சிறைப் பிடித்துவிட்டேன். இவ்வாறு கூறிக்கொண்டே மகிழ்ச்சியால் குதிக் கிருன்.) பொன்னி : இவ்வளவு நேரமாக நாகன் உங்களைக் காளுேம் காணுேமென்று கேட்டுக்கொண்டே இருந் தான். ஏன் இன்றைக்கு இவ்வளவு நேரம்? நாகன் : அப்பா, அந்த மூவேந்தரும் ஒடிப்போப் விட்டார்களா? நீங்கள்தானே வெற்றியடைந்தீர்கள்? (வந்த வீரன் பெயர் மாரன், கோட்டை வாயிலேக் காப்பது அவன் கடமை. அவனுக்குச் சுமார் முப்பது வயதிருக்கலாம்.) பெசன்னி : இன்று ஏன் மிகவும் களேப்படைந்திருக் கிறிர்கள்? பகைவர்கள் பல பேர்களே வெட்டிச் சாய்த்த தால் சோர்வாக இருக்கிறீர்களா? மாரன் (அவள் கேட்ட கேள்விக்கு விடை கூருமல்): பொன்னி, கொஞ்சம் தண்ணீர் கொண்டுவா, (அவன் முகத்திலே சிந்தன தேங்கியிருக்கிறது.) நாகன் : அப்பா, அந்த மூன்று அரசர்களும் சேர்ந்து கொண்டு பாரிவேளிடம் சண்டைக்கு வந்திருக்கிறர் களே, அவர்களுக்குக் கொஞ்சமாவது வீரமிருக்கிறதா? (பொன்னி உள்ளே சென்று தண்ணீர் கொண்டு வந்து தருகிருள்.: மாரன் : பொன்னி, தண்ணிர் ஏன் எப்படியோ இருக்கிறது? பொன்னி : கோட்.ைக்கு . வெளியிலிருந்து வரும் கால்வாயைப்-பகைவர்கள் அழித்துவிட்டார்கள்; இது ஏரித் தண்ணிர்.