பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பொன்னியின் தியாகம் நான் கோபத்தால் மரியாதையின்றிப் பேசியதை மன்னித்தருளுங்கள். சாது : தம்பி, பாக்யலக:மியின் ஆழ்ந்த அன்பே உங்களை நல்வழிப்படுத்தியிருக்கிறது. அவளுக்கு ஏற்ற கணவராக இனிமேல் நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். தாமோதரன் : சுவாமி, இனி அதில் தவறவே மாட் டேன். அவள் இருக்கும் இடத்திற்கு உடனே நான் போக வேண்டும். தாங்களும் என்னுடன் வந்து அவளுக்குச் சமாதானம் சொல்லுமாறு வேண்டுகிறேன். அவளிடம் எனது.நடத்தைகளுக்கெல்லாம்-மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன். சாது: இன்றே திருச்செந்துனருக்குப் புறப்படுவோம். திரை காட்சி ஆறு (திருச்செந்தூரில் கடற்கரை. வசந்தாவும் பர்க்ய லகடியியும் மணவில் தனியாக அமர்ந்திருக் கிருர்கள். மாலே நேரம்.1 ; : பாக்யலகஷ்மி : தெய்வமே, ஒரு பாவமும் அறியாத என்னை நீ இப்படிச் சோதிக்கலாமா ? குற்றம் செய்தவர் களுக்கும் அருள் செய்யும் நீஎன்னை இப்படிக் கண்னெ. டுத்துப் பாராமன் இருக்கிருயே: அடித்தாலும் வைதா லும் கணவனையே அண்டிக் கிடக்காமல் இப்படி நான் ஓடிவந்ததைக் குறித்து உனக்கு என்யிேல் கோபமா? (தேம்பி அழுகிருள்.} வசந்தா: பாக்யலக்ஷ்மி, இப்படி ஓயாமல் அழுது கொண்டிருக்காதே-உனக்கு ஒரு துன்பமும் வராது.