பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு வழி 宫 கிருஷ்னன் : இந்த தேசத்தின் நலத்திற்காக மட்டும் அவர் தோன்றினுரென்று நான் கருதவில்லை. அவர் இந்த உலகம் நாசமடையாமல் காப்பதற்கு உலகத்திலுள்ள எல்லாத் தேசங்களுக்கும் வழிகாட்ட வந்தாரென்றுதான் நான் சொல்லுவேன். - சரோஜா : அண்ணு, இன்று உலகம் போகிற போக் கைப் பார்த்தால் அது தப்பிப் பிழைக்குமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது. அணுகுண்டும். ஹைட் ரஜன் குண்டும் உலகத்திற்கே யமனுக வந்திருக்கின்றன. கண்ணம்மா : அதுக்குத்தானே மகாத்மா சண்டையே கூடாது என்று சொல்லியிருக்கிருர்? சுயராஜ்யம் வாங்கு வதற்குக்கூட ஆயுதமெடுத்துச் சண்டை போடக்கூடாது என்று சொல்லிவிட்டாரே? கிருஷ்ணன் : இனிமேல் ஆயுத பலத்தையே நம்பினுல் உலகத்தின் கதி அதோகதிதான். அணுகுண்டு, ஹைட் ரஜன் குண்டுகளாலேயே உலகம் அழிந்து போகும். சரோஜா : அப்படியிருந்தாலும் ஒவ்வொரு நாட்டு: விஞ்ஞானிகளும் அந்தமாதிரி அழிவுப் படை யுண்டாக்குள் வேலையில்தானே ஈடுபட்டிருக்கிருர்கள்? அவர்களுடை அறிவுத் திறமையெல்லாம் இப்படி நாச வேலைக்கே உய யோகமாகிறது. கிருஷ்ணன் : ஒருவன் அணுகுண்டு, தயார் செய்தால் இன்ளுெருவன் அதைவிடப் பயங்கரமான ஹைட்ரஜன், குண்டு கண்டுபிடிக்க முனைகிருன். இப்படி தாச காசிவத்தில் இன்று ஒரே போட்டியாக இருக்கிறது. சரோஜா :உலகத்திலிருக்கிற விஞ்ஞானி கண். யெல்லாம் முதலில் சிறையிவிட்டுப் பூட்டி விைக்க