இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நான் வழிமுழுதும் நின்று நின்று அப் பொன் நாணயத்தைப் பார்ப்பதும், மகிழ்வதுமாகவே இருந்தேன். நான் வீட்டுக்கு அருகே வந்ததும் ‘ஆ! என் எசமானர் கோபிப்பாரே! என எண்ணினேன். ஆதலால், நான் இரண்டொரு அடி வேகமாக வைத்து நடந்தேன்; பிறகு அசைவற்று ஒர் இடத்தில் நின்றுவிட்டேன். ஏன் என்றால், என் கையில் பொன் நாணயம இருந்தது அல்லவா ? அதை நான் எங்கே வைப்பது ? என எண்ணினேன்.
அந்தப் பொன் நாணயத்தை ஒளித்து வைக்க எனக்குத் தகுந்த இடம் எங்கும் அகப்படவில்லை. பூமியில் புதைத்து வைக்கலாம் என்று நான் நினைத்தேன்; ஆனால் அதை
14