இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அச்சமே குடிகொண்டிருந்தது. என் மார்பு படபட வென்று அடித்தது. வழியில் செல்வோரைப் பார்க்கும் பொழுது என் கால்கள் நடுங்க ஆரம்பித்தன. பிள்ளைகளே, அவ்வளவு துன்பங்களுக்கும் காரணம் 'என்ன ? அந்தப் பொன் நாணயமே - அல்லவா ? நான் அதனை அப்போதே கீழே எறிந்து விடலாம் என்று எண்ணினேன். ஆனால், அவ்விதம் செய்யவும் எனக்குச் சிறிதும் மனம் வரவில்லை. ஆதலால் நான்சிறிது நேரம் ஏதேதோ யோசித்தேன் :
சென்ற வாரம் எனக்கு ஒரு காலணு அகப்பட்டதே - ஆ! அதை நான் எவ்வளவு ஆசையுடன் எடுத்தேன் ! என்னுடன் இருந்த பிள்ளைகளும்
20