பக்கம்:பொன் நாணயம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வளவு அச்சத்தை உண்டாக்குகிறது? ஆதலால் இது எனக்கு வேண்டாம், என்று சொல்லிக் கொண்டே அதைத் தரையில் போட்டேன். அப்போது அது 'பள-பள' வென்று மின்னிக் கொண்டு கீழே விழுந்தது. அன்றியும் ஒரு வண்டி வரும் சப்தமும் எனக்குக் கேட்டது. நான் உடனே அதை அவசரத்துடன் எடுத்துத் துணியில் நன்றாக முடிந்துகொண்டேன்.

6

"சிறிது நேரம் சென்று நான் வீட்டை அடைந்தேன். அப்போது விளக்கு வைத்து நெடுநேரம் ஆகிவிட்டது. என் எசமானர் கோபிப்பார் அல்லவா? ஆதலால், நான் தலை குனிந்துகொண்டு, மெதுவாக உள்ளே சென்றேன். அப்போது

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_நாணயம்.pdf/23&oldid=1315379" இலிருந்து மீள்விக்கப்பட்டது