இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆம், அப்படியே செய்கிறேன், என்றார்.
7
"பிள்ளைகளே, அப்போது என் மனம் எப்படித் துடித்திருக்கும் என்பதை நீங்கள் எண்ணிப் பாருங்கள்! போலீஸ் உத்தியோகஸ்தன் போன பிறகும் நான் அவ்விடத்தை விட்டு எழுந்திருக்கவே இல்லை. பிறகு என் எசமானர், 'அடே குப்பா- குப்பா!' என்று கூப்பிடும் குரல் கேட்டது. ஆதலால், நான் நடுக்கத்தோடு மெதுவாக எழுந்து சென்றேன். என் எசமானர் மிகவும் கோபத்துடன் என்னைப் பார்த்தார்.
ஆ! அப்பொழுது நான் மிகவும் பயந்துவிட்டேன். அவர் என்னை அந்தப் போலீஸ் உத்தியோகஸ்த
26