பக்கம்:பொன் நாணயம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

னிடம் பிடித்துக் கொடுக்கப் போகிறார் என்றே எண்ணினேன். அச்சமயம் என்னால் பேசுதற்கும் முடியவில்லை. என் கைகளும் கால்களும் நடுங்கின. நான் மெதுவாக அடிமேல் அடி வைத்து அவரிடம் சென்றேன். அப்போது அவர், ‘அடே மடையா, முட்டாளே, நீ இவ்வளவு நேரம் எங்குச் சென்றிருந்தாய்! விளக்கு வைத்ததும் வீட்டுக்கு வர வேண்டாமா! சோம்பேறிப்பயலே, இனி இவ்விதம் வருவாயானால் நன்றாக உதை படுவாய்; விரைந்து உள்ளே செல் -- தடிப்பயலே,’ என்றார்.

நான் அவருக்கு யாதும் பதில் கூறவில்லை. அவர், என்மேல் கோபித்துக் கொண்டதற்காகவும் நான் சிறிதும் வருந்தவில்லை. அவர், 'அந்தப் பொன் நாணயத்தைக் கொடு' என்றாவது,

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_நாணயம்.pdf/28&oldid=1318235" இலிருந்து மீள்விக்கப்பட்டது