இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கேனும் அதைக் கொடுத்து விடலாமா என எண்ணினேன். அவ்விதம் செய்யவும் மனம் வரவில்லை. அதை என்னிடமே வைத்துக் கொள்ளவும் நான் விரும்பவில்லை.
பிறகு நான் வீட்டைப் பெருக்கத் தொடங்கினேன். அப்போது, என் எசமானர் ஏதோ கணக்குப் பார்த்துக் கொண்டு இருந்தார். அவருக்குச் சிறிது தூரத்திலே கணக்கப்பிள்ளை அமர்ந்திருந்தார்.
சிறிது நேரங் கழித்துக் கணக்கப் பிள்ளை, என் எசமானரைப் பார்த்து, 'நான் நேற்றுப் போக்கடித்து விட்டேனே! அது தங்களுக்கும் தெரிந்திருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன்,' என்றார்.
'என்ன ? - போக்கடித்து விட்டீரா!' என்று ஆச்சரியத்துடன் கேட்டார் என் எசமானர்.
35