இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பொன் நாணயத்தின் மேல் இருந்த ஆசையும் போய்விட்டது. நான் அதை அப்போதே அவருக்குக் கொடுத்து விட வேண்டும் என எண்ணினேன். ஆனால் அவ்விதம் நான் கொடுத்தால் 'அடே திருட்டுப் பயலே, இவ்வளவு நேரம் நீ அதைக் கொடுக்காமல் வைத்திருந்தாயே!' என்று என் எசமானர் கோபிப்பாரே என வருந்தினேன்.
நான் இவ்விதம் யோசித்துக் கொண்டு இருக்கும்போது என் எசமானர் கணக்கப் பிள்ளையை நோக்கி, 'ஐயா, நீர் இந்த விஷயத்தை உடனே போலீசில் தெரிவித்தீரா?' என்றார்.
அப்போது கணக்கப் பிள்ளை, 'இன்னும் இல்லை' என்றார்.
'ஏன் தெரிவிக்கவில்லை? நேற்று இங்கு ஒரு போலிஸ் உத்தியோகஸ்தர்
38