இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குப்புசாமிப் பிள்ளை அவர்களுக்குத் தக்கபடி பதில் கூறி அவர்களை மகிழ்வித்தனர்.
இவ்விதம் சிறிது நேரம் அச்சிறுவர்கள் வேடிக்கையாகப் பல பேசினார்கள். பிறகு அவர்கள் 'ஓ'வென்று கூவிக்கொண்டும் குதித்துக்கொண்டும் தம் தம் வீடுகளுக்கு விரைந்து சென்றார்கள். அன்று இரவு தூங்கும்பொழுதும் அவர்கள் அப் பொன் நாணயத்தைப்பற்றியே கனவு கண்டு கொண்டு இருந்தார்கள்.
குப்புசாமிப் பிள்ளை அச் சிறுவர்களுக்கு இவ்விதமே பல கதைகளும், சரித்திரங்களும் சொல்லிக்கொண்டு வந்தார். அதனால் அச் சிறுவர்கள் கல்வி அறிவும், உலக அனுபவமும் எளிதிலே பெற்றுப் பலரும் புகழ்ந்து பேசும்படி வாழ்ந்து வந்தார்கள்.