இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அந்தக் கிழவரின் பெயர் குப்புசாமிப் பிள்ளை. அவர் கதை சொல்லுவதில் கெட்டிக்காரர். பிள்ளைகளுக்குக் கதையின்மேல் மிகவும் ஆசை அல்லவா? ஆதலால் அவர்கள் கதை சொல்லும்படி அடிக்கடி அவரை வேண்டுவார்கள்.
ஒருநாள் இரவு ஏழு மணி இருக்கும்; அப்போது நிலவு பால் போல் அழகாகக் காய்ந்தது. அக்கிழவர் ஒரு திண்ணையின் மீது உட்கார்ந்து இருந்தார். சிறுவர் சிலர் அவரைச் சூழ்ந்து இருந்தனர்.
அன்று சனிக்கிழமை; ஆதலால், அவர்கள் பாடசாலைக்குச் செல்லவில்லை. தங்கள் பழைய பாட்ங்களை அவர்கள் சீக்கிரத்திலே படித்துவிட்டனர்; கதை கேட்கக் கிழவரிடம் ஆவலோடு வந்திருந்தனர்.