பக்கம்:பொன் விலங்கு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

111

"ஏன்? ஆர்டரைப்பற்றி உனக்கென்ன வந்தது. எல்லாரும் என்னைக் கழுத்தறுக்கிற மாதிரி நீயும் யாருக்காவது சிபாரிசு செய்யப் போகிறாயா? இந்த சிபாரிசு உபத்திரவத்துக்குப் பயந்துதான் நானே இரண்டு மூன்று நாட்கள் எங்காவது தலைமறைவாக எஸ்டேட் பக்கம் போய் இருந்துவிட்டு வரவேண்டும் என்று நினைக்கிறேனம்மா. தரக்குறைவான ஆட்களுக்குச் சிபாரிசு சொல்லிக் கொண்டு மிகவும் வேண்டிய மனிதர்கள் நேரில் வந்து சேர்கிறார்கள். இந்தக் கல்லூரி நீண்ட நாட்கள் நல்ல பெயரோடு நடப்பதற்குப் பணம் சேர்த்து வைத்து விட்டுப் போவதைவிட முக்கியமானது நல்ல ஆசிரியர்களை சேர்த்து வைப்பதுதான். மூன்றாவது வகுப்பில் மூன்றாந்தரமாகப் பாஸ் செய்திருக்கிற கழிசடைகளுக்குச் சிபாரிசு சொல்லிக் கொண்டு 'முதல்தரமான வேண்டியவர்கள் வந்தால் தட்டிக் கழிக்கவும் முடியாமல் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் திணற வேண்டி யிருக்கிறது' என்று சிரித்தபடியே மறுமொழி கூறினார் பூபதி. 'அப்பாவிடமிருந்து தான் தெரிந்துகொள்ள விரும்புகிற எந்த செய்தியையும் இப்போது தெரிந்துகொள்ள முடியாது; அவர் அதிக விழிப்புடன் இருக்கிறார்' என்பது புரிந்தவுடன் பேச்சை நகைச் சுவையாக வேறு வழியில் மாற்றிவிட்டுத் தப்பித்துக் கொண்டாள் பாரதி.

"நானும் ஒரு சிபாரிசு செய்யப் போகிறேன்.அப்பா ஆனால் அது நீங்கள் நினைக்கிறாற் போல் உங்களுக்குத் தொல்லை தருகிற சிபாரிசு இல்லை. என்றைக்கும் இதே போலத் தகுதியையும், திறமையையும், தெரிந்துகொண்டு நல்லவர்களையே தேர்ந்தெடுக்கும் என் அருமைத் தந்தைக்கு நோய் நொடிஇன்றி நீண்ட ஆயுளைத் தரவேண்டும் என்று கடவுளிடம் சிபாரிசு செய்கிறேனப்பா! கடவுள் என்னுடைய சிபாரிசுக்குச் செவிசாய்த்துத்தான் ஆகவேண்டும். ஏனென்றால் எல்லாத் தகுதிகளும் உள்ள முதல்தரமான மனிதருக்காக இந்தச் சிபாரிசைச் செய்கிறேன் நான் என்று மழலை மாறாத குழந்தைக் குரலில் சொல்லிவிட்டு அவள் கைகொட்டிச் சிரித்தபோது அந்தப் பேச்சைக் கேட்டு அப்பாவே அயர்ந்து போனார். தமிழ் விரிவுரை யாளர் பதவிக்காக அனுப்பப்படுவதற்கு இருக்கும் ஆர்டர் சத்தியமூர்த்திக்கா அல்லது வேறு ஒருவருக்கா என்பதை மிகவும் நாசூக்காக அப்பாவிடத்திலிருந்து தெரிந்து கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/113&oldid=1356185" இலிருந்து மீள்விக்கப்பட்டது