பக்கம்:பொன் விலங்கு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 127

வேட்கை நிறைந்த அந்த அழகிய கண்களின் பார்வையிலிருந்து விடுபட்டு பிரிந்து போகிறோமே என்ற ஏக்கம்தான் அவளிடம் மீதமிருந்தது.

உலகத்தில் சாதாரணமாக எல்லாருடைய கண்களும் தன்னைப் பார்க்கிறாற்போல் பார்க்காமல் சத்தியமூர்த்தியின் கண்கள் தன்னைப் பார்க்கும்போது அவற்றில் ஓர் ஆழ்ந்த அநுதாபம் இருப்பதை அவள் உணர்ந்தாள். இப்படி ஒர் அநுதாபத்துக்காகத்தான் அவள் பிறந்ததிலிருந்து தவித்துக் கொண்டிருந்தாள். பேனாவைக் கொடுத்த பின் சத்தியமூர்த்தியின் வீட்டுவாசலிலிருந்து கார் புறப்பட்டபோது, "பையன் தமிழ் எம்.ஏ. தேறி விட்டு வீட்டோட வறட்டு வேதாந்தம் பேசிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான். திமிருக்கு ஒன்றும் குறைவில்லை. இந்தத் திமிர் பிடித்தவனுக்கு வேலை பார்த்துக் கொடுக்கச் சொல்லி இவனுடைய தந்தை என்னிடம் சிபாரிசுக்கு வேறு வருகிறார்" என்று அலட்சியமாகச் சொல்லத் தொடங்கினார் கண்ணாயிரம். மோகினி முகத்தைச் சுளித்தாள். அவளுடைய அருமை அம்மாவோ கண்ணாயிரத்துக்குத் தலையாட்டிக் கொண்டு அதை உற்சாகமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். கண்ணாயிரத் திடமிருந்து அற்பத்தனமான புறம் பேசும் குணத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மோகினி மனம் நொந்தாள்.

அதே வீதியில் நாலைந்து வீடு தள்ளிச் சென்றபின் கார் மறுபடியும் நின்றது. அதுதான் கண்ணாயிரத்தின் வீடு என்று அம்மா காதருகே முணுமுணுத்தாள். மோகினி பதிலே சொல்லவில்லை. கேட்டுக் கொள்ளாததுபோல் இருந்து விட்டாள்.

'முத்தழகு அம்மாள் நம் வீட்டுக் காப்பி இந்த ஊரிலேயே தரமான காப்பி என்று பெயர் பெற்றதாகும். குடித்தபின் மோகினியே 'சர்டிபிகேட் கொடுக்கப் போகிறாள். பாருங்கள் இறங்கி வந்து பல் விளக்கிக் காப்பி குடியுங்கள். அதற்குள் நான் ஸ்டுடியோவுக்குப் ஃபோன் செய்து நாம் படம் பிடிக்க வரப்போவதை அவர்களுக்குச் சொல்லி விடுகிறேன்' என்று கண்ணாயிரம் உற்சாகமான அரட்டைச் சொற்களில் அவர்களை அழைத்தபோது, "ஆகா! அதுக்கென்ன? உங்கள் வீட்டுக் காப்பியைப் பற்றி சொல்லியா தெரிய வேணும்! மனுஷாளைப் போலத்தானே பண்டமும் இருக்கும்' என்று ஒத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/129&oldid=595055" இலிருந்து மீள்விக்கப்பட்டது