பக்கம்:பொன் விலங்கு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பொன் விலங்கு சிரமப்பட்டுத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருந்த காரணத்தால்தான் நடுநடுவே வாழ்க்கையை முடித்துக்கொண்டு ஒரேயடியாகப் போய்ச் சேர்ந்துவிடலாமா என்ற அலுப்பும், சோர்வும், விரக்தியும் அவளுக்கு ஏற்பட்டன. சில நாட்களில் உயிர் வாழ்வதற்கே அலுப்பாகவும் சோர்வாகவும் இருந்திருக்கிறது அவளுக்கு.

'மோகினி!...உனக்கு நானே காப்பிக் கொண்டு வந்து விட்டேன்."

-கையில் டவரா டம்ளருடனும் வாய் நிறைய விஷமச் சிரிப்புடனும் கண்ணாயிரம் காரருகே நின்று கொண்டிருந்தார். ஏதேதோ யோசனைகளில் மூழ்கியிருந்த மோகினி அவர் வந்து நின்றதைக் கவனித்துப் புரிந்துகொள்வதற்கே சில விநாடிகள் ஆயின.

'எனக்குக் காப்பி வேண்டாம் சார் சீக்கிரமாக வந்து ஸ்டுடியோவுக்கு அழைத்துப் போய்ப் படத்தைப் பிடித்துக் கொண்டு அனுப்புங்கள், வீட்டுக்குப் போய்த் தலை முழுக வேண்டும்" என்று அவள் சுடச்சுடப் பதில் கூறிய விதமும் பதிலின் முடிவில் இரட்டுற மொழிதலாக இரட்டைப் பொருளில் தலை முழுக வேண்டும் என்று கூறிய வாசகமும் கண்ணாயிரத்தைப் பொசுக்கின. அவர் முகத்தில் ஈயாடவில்லை. காப்பியோடும் ஏமாற்றத்தோடும் வீட்டுக்குள் திரும்பிப் போனார் அவர். கால்மணி நேரத்தில் அவரும் முத்தழகம்மாளும் மறுபடியும் வெளியே வந்தார்கள்.

கண்ணாயிரம் அமைதியாக ஆனால் உள்ளே நீறுபூத்து அடங்கிய கோபத்தோடு காரை ஒட்டினார். அம்மா மோகினியை எரித்து விடுவதுபோல் பார்த்தாள். 'தள்ளி உட்கார்ந்து தொலை. இப்படி இடிச்சிட்டு உட்கார்ந்தால்தான் நீ என் வயிற்றிலே பொறந்த அருமை தெரியுமாக்கும்?' என்று திரும்பி வந்து காரில் அமர்ந்ததும் காரணமின்றி அம்மா தன்னிடம் கொதித்துப் பேசியதிலிருந்தே அவள் மன நிலையை மோகினி புரிந்துகொள்ள முடிந்தது. தான் சொல்லியபடி பிறர் கேட்காதபோது வருகிற இந்த ஆற்றாமைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/132&oldid=595063" இலிருந்து மீள்விக்கப்பட்டது