பக்கம்:பொன் விலங்கு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 133

சொல்கிறார் தந்தை பொய்யாகவும் வஞ்சகமாகவும் வாழ்ந்தாலும், பணமும், காரியங்களை சாதிக்கிற திறமையும் உள்ளவர்கள் சமூகத்தை எவ்வளவிற்கு மயக்கி விடுகிறார்கள் என்று எண்ணி வியந்தான் சத்தியமூர்த்தி. தன்தந்தையே கண்ணாயிரத்தைப் பெரிய மனிதராக மதிக்கும் அளவிற்குக் கண்ணாயிரம் மயக்கும் தன்மை உள்ளவராக இருக்கிறார் என்பதை அறிந்தபோது வேதனையும் ஏமாற்றமும் அவனுக்கு ஒருங்கே ஏற்பட்டன. மீண்டும் அந்த வாக்கியங்களைத்தான் நினைத்தான் அவன். நல்ல மனித வாழ்க்கையில் தன்னுடைய ஒவ்வொரு தேவைக்காகவும் மட்டுமே போராட முடியாது. தன்னுடைய தேவைக்காகவும் நியாயத்துக் காகவும் சேர்ந்தே போராட வேண்டியிருக்கும்.'

நேர்மையான உணர்ச்சிகளில் ஆழ்ந்து வாழத் தெரியாமல் ஏனோதானோ என்று மிதந்து கொண்டு வாழும் கண்ணாயிரத்தைப் போன்றவர்களைச் சத்தியமூர்த்தி வெறுத்தான், அவனுடைய தந்தையோ கண்ணாயிரத்தைப் போன்றவர்களின் தயவு என்றைக்கும் வேண்டும் என்கிறார்.

'என்ன, நான் சொல்லியது ஞாபகத்தில் இருக்கட்டும்! சாயங்காலம் கண்ணாயிரத்தைப் போய்ப் பார்த்து விட்டு வா...' என்று மறுபடியும் அவன் தந்தை அவனை வற்புறுத்தினார். தன் கையிலிருந்த அந்தக் கடிதத்தை - அதைச் சூழ்ந்து கொண்டு மணக்கும் மல்லிகைப்பூ மணத்தோடு சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு தந்தையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான் சத்தியமூர்த்தி, 'கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதித்தாலும் நான் கண்ணாயிரத்துக்கு முன்னால் போய்க் கையைக் கட்டிக் கொண்டு நிற்கமாட்டேன் அப்பா' என்று சொல்லிவிடுவதற்கு நாக்குத் துடித்தது. தான் அப்படி எதிர்த்துப் பேசினால் வாழ்க்கையில் பல காரணங்களால் ஏற்கெனவே நொந்து போயிருக்கிற தந்தையின் மனம் இன்னும் வேதனை கொள்ளும் என்று தன்னை அடக்கிக் கட்டுப்படுத்திக் கொண்டான் சத்தியமூர்த்தி. r

கண்ணாயிரம் என்னும் பொய்ம்மைக்குமுன்னால் போய் நிற்கிற துர்ப்பாக்கியம் தனக்கு நேராமலிருப்பதற்காகவாவது உடனே பூபதி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி விடவேண்டும் என்ற முடிவுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/135&oldid=595069" இலிருந்து மீள்விக்கப்பட்டது