பக்கம்:பொன் விலங்கு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 135

மலர்ச்சியான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு வெள்ளிக்கிழமை சாயங்காலங்களில் தான் பேச்சியம்மன் கோவிலில் போடுகிற நெய் விளக்கும், திங்கள் கிழமை மாலை வேளைகளில் பழைய சொக்கநாதர் கோவிலைச்சுற்றுகிற சுற்றுகளுமே போதுமென்று நினைக்கமாட்டாள். அப்பா, அம்மா, தங்கைகள் எல்லாருமே தான் சம்பாதித்துப்போடத் தொடங்கியபின்புதான் அந்தக் குடும்பத்துக்கு விடியப்போகிறதென்று காத்திருப்பது அவனுக்குத் தெரியும். நெஞ்சின் இரத்தம் சொட்டச் சொட்ட அந்த வீட்டுக்கு உழைக்க வேண்டுமென்றுதான் ஒரு தீர்மான மான முடிவு செய்துகொண்ட மனநிலையோடு பூபதி அவர்களுக்கு கடிதம் எழுத உட்கார்ந்தான் அவன்.

பகல் மூன்றரை மணிக்கு அந்தக் கடிதத்தை எழுதத் தொடங்கியவன், நாலரை மணிவரை-சரியாக ஒரு மணிநேரம் எழுதியிருக்கிறான். கடிதம் வரிக்கு வரி, வாக்கியத்துக்கு வாக்கியம் யாருக்கு எழுதப்பட்டதோ அவருடைய மனத்தைக் கவ்வுகிறாற் போல் வாய்த்திருந்தது. பூபதி அவர்களின் மனத்தில் அந்தக் கடிதம் தன்னைப்பற்றி நிச்சயமாக ஒரு நல்ல முடிவுக்கு வரத் துணை செய்யும் என்ற முழு நம்பிக்கையோடுதான் சத்தியமூர்த்தி அந்தக் கடிதத்தைத் தபாலில் சேர்ப்பதற்குப் புறப்பட்டான். அதை எழுதி முடித்தபோது அவன் மனம் குழப்பமின்றி நிம்மதியாயிருந்தது. ஆனாலும் ஒன்றை நினைக்கும்போது அவன் மனம் திரும்பத் திரும்பக் குமுறத்தான் செய்தது. பதவியையும் செல்வத்தையும் செல்வாக்கையும் தேடுவதற்குத் தகுதியும் நேர்மையான திறமையும் மட்டுமே இன்றைய வாழ்க்கையில் போதுமானவையாக இருப்ப தில்லை. சிந்திப்பதற்குத் தேவையான திறமை வேறாக இருக்கிறது. வாழ்வதற்குத் தேவையான திறமை வேறாக இருக்கிறது. என்னைப்போல் எம்.ஏ. முதல் வகுப்புத் தேர்ச்சியும், வாழ்க்கைப் பற்றிய நல்ல இலட்சியங்களும் உள்ளவர்கள் ஓர் உத்தியோகத்துக் காக, வயிற்றை நிரப்பிக் கொள்ள வழி செய்யும் ஒரு வெறும் உத்தியோகத்துக்காக இப்படி நாயாக அலைகிறோம். கண்ணா யிரத்தைப்போல் அறிவையும் முதலீடு செய்யாமல், பணத்தையும் முதலீடு செய்யாமல், வெறும் சாமர்த்தியத்தையும் சூழ்ச்சியையுமே முதலீடு செய்து வாழ்க்கையில் மேலும் மேலும் வென்று கொண்டு போகிறவர்களும் இதே உலகில்தான் இருக்கிறார்கள். அவர் களுடைய சாமர்த்தியம் அப்பாவைப் போன்ற நல்லவர்களைக் கூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/137&oldid=595073" இலிருந்து மீள்விக்கப்பட்டது