பக்கம்:பொன் விலங்கு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பொன் விலங்கு

மயக்கிக் கவர்ந்து விடுகிறதே! என்று மனம் புழுங்கியபடி தபாலாபீஸின் கல் கட்டிடத்திற்குள் நுழைந்து கடிதத்தைத் தபாலில் சேர்த்துவிட்டு அவன் வெளியேறியபோது, 'இந்த ஊரில்தான் இருக்கிறாயா சத்யம்? பார்த்து வெகு நாட்களாயிற்றே?" என்று குமரப்பன் எதிர் கொண்டான். தனக்கு மிகவும் நெருங்கிய தோழனாகக் கல்லூரி நாட்களிலிருந்தே பழகியிருக்கும் அந்த நண்பனை மனத்தின் தவிப்பு நிறைந்த இந்த வேளையில் சந்தித்தது சத்தியமூர்த்திக்கு மிகவும் ஆறுதலாயிருந்தது. குமரப்பனுடைய கைத்திறன் விந்தையானது. எந்தச் சித்திரக் கலாசாலையிலும் கற்காமலே அவன் கைகள் இழுக்கும் கோடுகளிலே சிரிப்பும், அழுகையும், சீற்றமும் வேட்கையும் தெரியும்படி விதம்விதமான மனித உருவங்கள் பிறந்தன. பொழுதுபோக்காகவும் விளையாட்டாகவும் தொடங்கிய இந்தக் கலை, கல்லூரி நாட்களிலேயே அவனைச் சிறந்த வல்லுநனாக்கியிருந்தது. நகைச்சுவைச் சித்திரங்களையும் கேலிச் சித்திரங்களையும் அவனுடைய சுறுசுறுப்பான கைகள் நொடிப்பொழுதில் பக்குவமாக வரைந்து முடித்தன. அவன் கரங்கள் காகிதத்தில் வேகமாகவும் சாமர்த்தியமாகவும் விளையாடின. சத்தியமூர்த்தியோடு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு ஏதோ ஒரு பத்திரிகையில் கார்ட்டூனிஸ்ட் ஆகப் போய்விட்டான் குமரப்பன். அந்த வேலையும் அவனாகத் தேடிப் போய் அடைந்ததல்ல. தானாகவே அவனைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தது அந்த வேலை. கல்லூரிப் பொருட்காட்சியில் அவன் வரைந்து வைத்திருந்த சுவையான கேலிச் சித்திரங்கள் சிலவற்றைக் கண்டு வியந்த அந்தப் பத்திரிகையாசிரியர் அவனிடம் அமைந்திருந்த இந்த நுணுக்கமான திறமையைக் கண்டுபிடித்து அவனைத் தேர்ந்தெடுத்தார். குமரப்பன் வெறும் தொழில் நோக்குடனோ பணத்துக்கோ ஆசைப்பட்டுத் தவிக்கும் மனநிலையுடனோ கார்ட்டூனிஸ்ட் ஆகவில்லை. இயற்கையாகவே அவனுடைய கண்களும், மனமும் இந்த உலகத்தையும் இதன் நிகழ்ச்சிகளையும் குறும்புத்தனமான சுறுசுறுப்போடு பார்க்கும் தன்மை வாய்ந்தவை. புத்திக்கூர்மையும் அவனுக்கு அதிகம். 'பூகோள நூலின்படி உருண்டை வடிவமான இந்த உலகம் சுற்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/138&oldid=595075" இலிருந்து மீள்விக்கப்பட்டது