பக்கம்:பொன் விலங்கு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பொன் விலங்கு

சந்தித்தாற் போலாகிவிட்டது. கடிதத்தைத் தபாலில் சேர்த்துவிட்டு அப்படியே இரயில்வே மேற்பாலம் வழியாக எங்காவது உலாவப் போகலாமென்று வந்தேன். நல்ல நேரதத்தில்தான் நீயும் வந்து சேர்ந்திருக்கிறாய்” என்று சத்தியமூர்த்தி பதில் சொல்லிக்கொண்டு வந்தபோது பாதியிலேயே அவன் பேச்சைத் தடுத்து நிறுத்திவிட்டு, "அதுசரி நீ என்னை ஒரு சர்வகலாசாலையோடு ஒப்பிடுவதை ஒரே ஒரு காரணத்துக்காக நான் மறுக்கிறேன். நான் தெரிந்து கொண்டிருக்கிற பல விஷயங்களை உலகத்தில் எந்தச் சர்வகலாசாலையிலும் சொல்லிக் கொடுப்பதற்குத் தயாராயிருக்க மாட்டார்கள்" எனச் சொல்லிச் சிரித்தான் குமரப்பன். அவனுடைய அந்தக் கர்வத்தைப் பார்த்துச் சத்தியமூர்த்தியாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கிறபோதே எதிரில் சந்திக்கிற ஒவ்வொருவரது பார்வையையும், முகத்தையும், நடையையும்கூட விமரிசனம் செய்து சிரித்துப் பேசிக்கொண்டே நடப்பான் குமரப்பன். எதையாவது தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற குறும்புத் தனமான ஆர்வத்தோடு அவன் கண்கள் சதா அலைந்து கொண்டிருக்கும். அப்போது அவர்கள் நடந்துபோய்க் கொண்டிருந்த பாதையில் எதிர்ப்பக்கமிருந்து ஆன் டெஸ்ட் என்று போர்டு மாட்டியபடி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.

"லாரி-கார்களுக்குப் போடுகிறமாதிரி சில ஆட்களுக்கும் இந்த போர்டு மாட்ட வேண்டுமடா சத்யம் சரியாக வாழ்வதற்குப் பழகாமல் தாறுமாறாக வாழ்கிற சிலருடைய வாழ்க்கையும் ஆன் டெஸ்ட் ஆகத்தான் இருக்கும். முழுப்பக்குவமும் பெறாமல் வாழ்வதற்கும், பிறரிடம் பழகுவதற்கும் கற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிற சில மனிதர்கள்கூட மார்பில் 'எல் போர்டு மாட்டிக்கொள்ள வேண்டும். போர்டாக மாட்டிக்கொள்ள முடியாவிட்டால் சட்டைப் பித்தானிலாவது எனாமலில் எல்' பதித்துக் கொள்ளலாம்' என்று அரட்டையைத் தொடங்கினான் குமரப்பன். -

"குத்துவிளக்கு எப்படிஇருக்கிறது குமரப்பன்?" என்று அவன் வேலை பார்க்கிற பத்திரிகையைப் பற்றி விசாரிக்கலானான் சத்தியமூர்த்தி.

'ஆஹா கேட்க வேண்டுமா? சுடர்விட்டுப் பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கிறது. அச்சு இயந்திரங்களும் மனிதர்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/140&oldid=595081" இலிருந்து மீள்விக்கப்பட்டது