பக்கம்:பொன் விலங்கு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 139

வேகமாக ஒடிக் கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர் போன வாரம்தான் பெர்லினிலிருந்து திரும்பினார். இந்த வாரம் ஜப்பானுக்குப் போவார் போலிருக்கிறது. இதுவரை வாரம் ஒன்றிற்கு மொத்தம் - நாலு பக்கம் எட்டுக் கார்ட்டூன்கள் போட்டுக் கொண்டிருந்தேன். கார்ட்டூன்கள் மிகவும் நன்றாக இருப்பதால் அடுத்த வாரத்திலிருந்து ஆறு பக்கத்துக்குப் பன்னிரண்டு கார்ட்டூன்கள் போடவேண்டும் என்று ஏற்பாடாகியிருக்கிறது. எங்கள் பத்திரிகைக்கு என்னடா குறை? போதும் போதும் என்று சொன்னாலும் கேட்காதபடி கண்ணாயிரம் விளம்பரங்களைத் தேடிக்கொண்டு வந்து குவிக்கிறார். விளம் பரங்கள் பணத்தைத் தேடிக்கொண்டு வந்து குவிக்கின்றன. பணம் செளகரியங்களைத் தேடிக்கொண்டு வந்து குவிக்கிறது."

"இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது உண்டா?" 'உண்டு! தாராளமாக உண்டு. விற்பனையைப் பெருக்கு வதற்காக ராசி பலன் போடலாமென்று ஓர் அபிப்பிராயம் இருக்கிறது. சினிமா நட்சத்திரங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக வந்தால் நல்லதென்று ஏஜண்டுகள் ஆசைப்படுகிறார்கள். துவையல் அரைப்பதைப் பற்றி வாரம் ஒரு பக்கம் வந்தால் பெண்களுக்குத் திருப்தியாயிருக்குமாம்."

'போதும் போதும்...நான் ஏதோ ஒரு வார்த்தைக்குக் கேட்டால் நீ என்னென்னவோ வம்பு வளர்த்துக் கொண்டு போகிறாயே? உன் குறும்புப் பேச்செல்லாம் என்றைக்குத்தான் ஒடுங்கப் போகிறதோ?”

-இதைக் கேட்டுக் குமரப்பன் சத்தியமூர்த்தியின் முகத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டுச் சிரித்தான். சிரித்துக்கொண்டே சொன்னான்:

"இந்தக் குறும்புத்தனம்தான் என்னுடைய தொழிலுக்கு மூலதனம் அப்பனே இதை விட்டு விட்டு அப்புறம் நான் எங்கே போவது?"

'பால் டபோரி என்று ஒர் மேற்கு நாட்டு ஆசிரியன் முட்டாள்தனத்தையே ஒரு கலையாக (தி ஆர்ட் ஆஃப் ஃபாலி) வருணித்துப் புத்தகம் எழுதியிருக்கிறான் தெரியுமா குமரப்பன்?"

"ஒரு தடவை மட்டுமல்ல; இரண்டு மூன்று தடவை அந்தப் புத்தகத்தை நான் படித்திருக்கிறேனடா சத்யம். பைத்தியக்காரத்தனம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/141&oldid=595083" இலிருந்து மீள்விக்கப்பட்டது