பக்கம்:பொன் விலங்கு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பொன் விலங்கு

நவநாகரிகம், முட்டாள்தனம். இந்த மூன்று அம்சங்களுக்குள்ளேயே மனித வர்க்கத்தின் முழுச் சரித்திரத்தையும் நான் சொல்லி முடித்து விடுவேன் -என்று அந்தப் புத்தகத்தைப் 'பால் டபோரி ஆரம்பித் திருப்பான்.

"எதற்காகச் சொல்ல வந்தேன் என்றால் 'பால் டபோரி அந்தப் புத்தகத்தில் மனித வாழ்க்கையை எந்தக் கோணத்திலிருந்து பார்த் திருக்கிறானோ அதே கோணத்திலிருந்து மட்டும்தான் நீயும் நம்மைச் சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கையைப் பார்க்கிறாய் குமரப்பன்'

'மகிழ்ச்சியோடு ஒப்புக் கொள்கிறேனடா, சத்யம். எனக்கு வாழ்க்கையை அந்தக் கோணத்திலிருந்துதான் பார்க்கத் தெரியும். கண்ணாயிரத்தைப்போல் மற்றவர்களை முட்டாள்களாக்கிக் கொண்டு வாழ்கிற போலிப் புத்திசாலிகள் உள்ள உலகத்தில் வாழ்க்கையை நீயும் நானும் வேறுவிதமான கோணத்திலிருந்து பார்த்துப் பயனில்லை அப்பனே, பயனில்லை."

'எனக்கு உத்தியோகம் தேடிக் கொள்வதற்காக நான் இன்று மாலைக்குள் கண்ணாயிரத்தைப் போய்ச் சந்திக்க வேண்டுமென்று என் தந்தையே சொல்லியிருக்கிறார் குமரப்பன் நான் என்னடா வென்றால் என் தந்தையின் கட்டளையையும் கண்ணாயிரத்தையும், உத்தியோகத்தையும், அறவே மறந்துவிட்டு உன்னோடு உலாவப் புறப்பட்டிருக்கிறேன். இந்தக் கண்ணாயிரம் மாதிரி மனிதர்களைத் தேடிக்கொண்டு போய் எதிரே நிற்க வேண்டுமென்று நினைக்கும் போதே எனக்கென்னவோ மிகவும் அருவருப்பாக இருக்கிறது, குமரப்பன்."

"நீ இவர்களைப் போன்றவர்களைப் பார்த்து அருவருப்புத்தான் அடைகிறாய்! நானும் 'பால் டபோரியும் இவர்களைப் போன்றவர் களையும் பார்த்து இரசிக்கிறோம். உனக்கும் எனக்குமுள்ள வேறுபாடு இதுதான் சத்தியம்'

அப்பால் இரயில் நிலையத்துக்கும் - இப்பால் பஸ் நிலை யத்துக்கும் நடுவே அமைந்திருந்த அந்த மேற்பாலத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள் அவர்கள். வழக்கமாக மாலை வேளைகளில் அந்த இடத்தில் பாய்ந்து வீசும் காற்று இன்றும் சுகமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/142&oldid=595085" இலிருந்து மீள்விக்கப்பட்டது