பக்கம்:பொன் விலங்கு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பொன் விலங்கு

என்றுதான் சத்தியமூர்த்தியால் நினைக்க முடிந்தது. பக்கத்தில் நின்ற ஒருவர் அவனிடம் சொல்லலானார்.

"என்ன அநியாயம் சார் கலிகாலம் என்கிறது சரியாயிருக்குப் பாருங்க. வயிற்றிலே வெறும் பானையைக் கட்டிக் கொண்டு இத்தனை நாட்களாக இந்தப் பாதையில் வந்து போய்க் கொண்டிருக்கிற அத்தனை பேரையும் முட்டாள்களாக்கியிருக் கிறாளே சார். அப்படியே அசல் வயிற்றுப் பிள்ளைக்காரி மாதிரி எல்லாரையும் நம்ப வைச்சிப் பிழைப்பை நடத்தியிருக்கா..."

'அவளைக் குற்றம் சொல்லிக் கலிகாலத்தின் தலையில் பழியைப் போட்டுவிட்டால் மட்டும்போதாது சார் உலகம் அவளை அநாதையாய்ப் பிழைக்க வழியில்லாமல் முட்டாளாக்கியிருக்கிறது. அவள் வேறு வழியில்லாத காரணத்தால் பதிலுக்கு உலகத்தை முட்டாளாக்கத் தொடங்கியிருக்கிறாள்" என்று அவருக்குப் பதில் கூறினான் சத்தியமூர்த்தி. இந்தப் பதிலை அவனிடமிருந்து எதிர்பாராத அந்த மனிதர் அவனை முறைத்துப் பார்த்தார். உலகத்தைப் பார்த்து அதைப் படைத்த கடவுளுக்கே தலைசுற்றுவதாக ஒரு கார்ட்டூன் வரைய வேண்டுமென்று குமரப்பன் அடிக்கடி சொல்லுகிற வாக்கியத்தை இப்போது நினைத்துக் கொண்டான் சத்தியமூர்த்தி. தன்னுடைய துன்பங்கள் பலவாக இருந்தும் இப்படித் தெருவில் சந்திக்கிற சுகதுக்க பிரச்சினைகளும் தன் இதயத்தைப் பாதிப்பதையோ, உள்ளே புகுந்து எண்ணங்களாக உருவெடுப் பதையோ, தவிர்க்க முடியாமல் தவித்தான் அவன். அந்த அப்பாவிப் பிச்சைக்காரப் பெண்ணைக் கூட்டம் கல்லாலடித்தே கொன்று விடாமல் மிகவும் சிரமப்பட்டுப் பேசித் தடுக்க வேண்டியிருந்தது. -

"இவரு பெரிசா நியாயத்தைக் கண்டுட்டாரு... இந்தக் காலத்திலே பெண்பிள்ளையின்னா... இப்படிப் பரிஞ்சுக்கிட்டு வர்ரவங்க அதிகமாத்தான் இருப்பாங்க" என்று சத்தியமூர்த்தியை வம்புக்கு இழுத்தான் ஒரு காலி நிதானமாகப் பதில் சொல்ல வேண்டியவர்களுக்கு நிதானமாகப் பதில் சொல்லியும் கொதிப் போடு பதில் சொல்ல வேண்டியவர்களுக்குக் கொதிப்போடு பதில் சொல்லியும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி அந்தப் பிச்சைக்காரியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/150&oldid=595103" இலிருந்து மீள்விக்கப்பட்டது