பக்கம்:பொன் விலங்கு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பொன் விலங்கு "அப்படிச் சொல்லாதீர்கள். என் வாழ்க்கையில் நான் பார்த்தபார்த்துக் கொண்டிருக்கிற ஒரே உண்மை நீங்கள்தான்."

"இருக்கலாம். ஆனால் இந்த உண்மை மிகவும் ஏழையா யிருக்கிறதே!"

'ஆதரவற்றதெல்லாம் ஏழைதான். அந்த விதத்தில் உண்மையும் ஏழையாயிருப்பதில் தவறில்லை...' என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே சுற்றுமுற்றும் யாராவது வருகிறார்களா என்று பார்த்துவிட்டுச் சத்தியமூர்த்தியே எதிர்பார்த்திருக்க முடியாதபடி கீழே குனிந்து தேங்காய் பழத்தட்டை வைத்துவிட்டு அவசரம் அவசரமாக அவன் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொண்டு எழுந்தாள் மோகினி. சத்தியமூர்த்திக்கு மெய் சிலிர்த்தது. பிராகாரத் திருப்பத்தில் இது நிகழ்ந்தது. மோகினியோடு வந்திருந்த சிறுவன் முன்னால் நடந்து போயிருந்தான். அவர்களும் அவன் பின்னால் மெல்ல நடந்து சென்றார்கள்.

'இரயிலில் நீங்கள் வந்த பெட்டியில் நானும் சேர்ந்து வந்ததைப் பார்த்துவிட்டே பொறுமையிழந்து போய் என்னிடம் கேள்விகளைக் கேட்டார் கண்ணாயிரம். இப்போது இந்தக் கோயில் பிராகாரத்தில் நாமிருவரும் சேர்ந்து நடப்பதை அவர் பார்த்தால் என்னைக் கொலையே பண்ணிவிடுவார்.”

'திரும்பத் திரும்ப அந்தப் பாவியைப் பற்றியே பேசிக் கோவிலைக் களங்கப்படுத்தாதீர்கள். அந்தக் கொடியவனைப் பற்றிப் பேசுவதற்குக் கோவிலைப்போல் புனிதமான இடம் தகுதியான தில்லை..."

இப்படிக் கண்ணாயிரத்தைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அவள் குரலும் முகமும் சீற்றமடைவதையும் கண்கள் சினம் கனலுவதையும் பார்த்துச் சத்தியமூர்த்தியே மருண்டான். வாழ்க்கையின் தீய சக்திகளை எதிரே சந்திக்கவும் பொறுத்துக் கொள்ளவும் முடியாமல் குமுறுகிற இவளையும், தீய சக்திகளையும் பொறுத்துக்கொண்டாவது காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டுமென்று நினைக்கும் இவள் தாயையும் தன் மனத்துக்குள் சத்தியமூர்த்தி ஒப்பிட்டுச் சிந்தித்தான். எப்போது பேசினாலும் அவள் பேசுகிற வாக்கியங்களில் தனி முத்திரையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/156&oldid=595115" இலிருந்து மீள்விக்கப்பட்டது