பக்கம்:பொன் விலங்கு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பொன் விலங்கு

ஆத்திலே எறங்குது?" என்று அழகர் ஆற்றில் இறங்குவதைப்பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்கள். தெருக்களில் கோடைக்கான கீற்றுப் பந்தல்களும், தண்ணீர்ப் பானைகளும் அதிகமாயின. கல்லூரிகளிலும், பள்ளிக்கூடங்களிலும் தங்கள் மக்களைச் சேர்க்க இடம் தேடி அலையும் பெற்றோர்களும் பெண் குழந்தைகளுக்கு வரன் தேடி அலையும் பெற்றோர்களுமாக எங்கும் ஒருவிதமான பரபரப்போடு வாழ்க்கை ஒடத் தொடங்கியிருந்தது. பகல் நேரம் முழுவதும் சத்தியமூர்த்தி வீட்டிலேயே அடைந்து கிடந்தான். அப்பா கண்ணாயிரத்தைச் சந்திக்கச் சொல்லி அவனை நச்சரித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் எதாவது சாக்குப் போக்குச் சொல்லிக் கண்ணாயிரத்தை பார்க்காமல் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தான் அவன். மல்லிகைப் பந்தலில் இருந்து ஒரு விதமான தகவலும் வராமற் போகவே தந்தை சத்தியமூர்த்தியை அதிகமாக வற்புறுத்தத் தொடங்கியிருந்தார். தந்தை அவனிடம் நேரடியாகச் சொல்லாவிட்டாலும் அம்மாவின் மூலம் இன்னொரு தகவலும் அவனுக்குத் தெரிந்தது. வீட்டு மாடியை இடித்துக் காட்டுவதற்காகவும், தங்கை ஆண்டாளின் திருமணச் செலவுக்காகவும் அப்பா கண்ணாயிரத்திடம் ஐயாயிரம் ரூபாய்க்குமேல் கடன் கேட்டு அலைந்து கொண்டிருக்கிறாராம். முதலை வாய்க்குள் காலை விடுவதைப் போல் அப்பா கண்ணாயிரத்தின் பிடியில் தானாகப் போய் வலுவில் சிக்கிக் கொள்கிறாரே என்பதை எண்ணிப் பார்த்தபோது அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இந்தச் செய்தியை அறிந்த பின்பே கண்ணாயிரத்தோடு தன் தந்தை அடிக்கடி சுற்றிக் கொண்டிருப் பதற்கும், உடனே கண்ணாயிரத்தைப் பார்க்கும்படித் தன்னைத் தூண்டுவதற்கும் சரியான காரணம் அவனுக்குப் புரிந்தது. காலையும் மாலையும் எப்போது வந்து கண்ணாயிரம் கூப்பிட்டாலும் அப்பா மறுக்காமல் அவரோடு காரேறிப் போய்க் கொண்டிருந்ததற்கு வெளிப்படையாக வேறு என்னவோ காரணம் சொல்லிக் கொண்டிருந்தார். 'மஞ்சள்பட்டி ஜமீன்தார் மக்கள் சபைத்தேர்தலுக்கு நிற்கப் போகிறானாம். ஆங்கிலமும் தெரியாமல் இந்தியும் தெரியாமல் தில்லிக்குப் போனால் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டமாதிரி இருக்காதா? அதனால் ஜமீன்தாருக்கு மிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/160&oldid=595125" இலிருந்து மீள்விக்கப்பட்டது