பக்கம்:பொன் விலங்கு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 163

ஒரே முரண்டு பிடித்தான். பல்கலைக் கழகப் பரீட்சையில் அந்தப் பையன் தேறாமல் போனதற்குக் கல்லூரியின் முதல்வர் காரணமாக இருக்க முடியாதென்று அப்பாவுக்குத் தெரிந்திருந்தாலும், இந்த நிகழ்ச்சியால் முதல்வரிடம் அவர் வைத்திருந்த நம்பிக்கை குறைந்திருக்கிறது. மாணவர்களைக் கொலை செய்யவும் துணிந்துவிடத் தூண்டு மளவுக்கு முதல்வரிடம் என்ன கெட்ட குணம் இருக்க முடியும் என்று அப்பா சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார். முதல்வருக்குச் சம்பந்தமில்லாத பொதுப் பரீட்சையில் நான் தேறாமல் போனதற்கு முதல்வர் காரணம் என்று அந்தப் பையன் கூறுவது உணர்ச்சி வெறியால் இருக்கலாம் என்று தெரிந்திருந்தும், இப்படி ஒரு சம்பவம் நேர்ந்ததால் அப்பா மிகவும் மனம் குழம்பிப் போயிருக்கிறார். இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளியானால் மல்லிகைப் பந்தல் கல்லூரியின் பெயர் கெட்டுவிடுமே என்று அஞ்சி மிகவும் சிரமப்பட்டுத் தடுத்திருக்கிறார். கல்லூரி முதல்வர் தோள்பட்டையில் கத்திக்குத்துக் காயத்தோடு நாலைந்து நாள் ஆஸ்பத்திரியில் இருந்தார். முதல் நாள் சம்பவம் நடந்த தினத்தன்று நானும் அப்பாவும் கல்லூரி முதல்வரைப் பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குப் போயிருந் தோம். அப்பா ஆஸ்பத்திரியிலேயே முதல்வரைக் கண்டித்தார்.

"இளம் பிள்ளைகளை நிறைய மன்னித்த பின்னே திருத்த முடியும். ஒரு பையன், நீங்கள் காரணமில்லாத ஒரு காரியத்துக்காக உங்களைக் கொலை செய்துவிடக் கத்தியைத் துக்கிக்கொண்டு வரும் அளவு என்ன கெடுதலை நீங்கள் அவனுக்குச் செய்திருக்க முடியும் என்று எனக்குப் புரியவே இல்லை! இந்தவிதமான அசம்பாவிதங்களில் இதுவே கடைசியாக இருக்க வேண்டும்' என்று கடுமையான குரலில் அப்பா முதல்வரைக் கண்டித்தபோது நானும் அருகில்தான் இருந்தேன். கேம்பிரிட்ஜில் படித்து ஆக்ஸ்போர்டில் டாக்டர் பட்டம் வாங்கி விட்டால் மட்டும்போதுமா? பையன்களிடம் அன்பும் நெகிழ்ச்சியும் கொண்டு பழகி அவர்களை வசப்படுத்தத் தெரியாவிட்டால் என்ன பயன்? நீங்கள் உங்களுடைய பட்டுப் பாதங்களால் இந்தக் கல்லூரிக் காம்பவுண்டுக்குள் நடக்கப் போகிற முதல் தினத்திலிருந்து இந்தவிதமான வம்புகள் எல்லாம் தொலைந்து போகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் இங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/165&oldid=595134" இலிருந்து மீள்விக்கப்பட்டது