பக்கம்:பொன் விலங்கு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 பொன் விலங்கு

விரிவுரையாளராக வந்தபின் எப்படிப்பட்டமுரட்டு இளைஞர்களும் உங்களைச் சுற்றிக் கைகூப்பிக்கொண்டு திரியப் போகிறார்கள்: பாருங்களேன். நீங்கள் இங்கே மல்லிகைப் பந்தலுக்கு வந்துவிட்டுத் திரும்பிய தினத்தன்று மாலை வேறொரு முதியவருக்கு இன்டர்வ்யூ நடத்தி முடித்து அவரை அனுப்பியபின் அப்பாவும் கல்லூரி முதல்வரும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததை நானே என் செவிகளால் கேட்டேன். அப்போது கல்லூரி முதல்வர் உங்களைப் பற்றி அப்பாவிடம் என்ன சொன்னார் தெரியுமா?

'சத்தியமூர்த்தியைப்போல் இளம் பருவமும் தோற்றப் பொலிவும் கேட்டவர்களை மயக்கிவிடுகிற பேச்சுக் கவர்ச்சியும் உள்ள இளைஞனால் மாணவர் மனங்களை விரைவில் கெடுக்க முடியும் என்று நாவு கூசாமல் அப்பாவிடம் குறை சொன்னவர்தானே இவர்? அப்படிச் சொன்னவருக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். அப்பப்பா இந்த மனிதர் இருக்கிற இடத்தில் நெருப்புப் பிடித்து வெந்து போகும், நல்லவேளையாக இவர் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை. உங்கள் கடிதம் கிடைப்பதற்கு முன்பே அப்பா தமிழ் விரிவுரையாளராக உங்களைத்தான் நியமிக்க எண்ணி யிருந்தார். உங்கள் கடிதம் கிடைத்தபின் அந்த எண்ணம் நிச்சயமாகி விட்டது. ஆனாலும் ஏனோ இத்தனை நாள் தாமதமாகியபின் நேற்றுத்தான் உங்களுக்கு ஆர்டர் டைப் செய்யச் சொல்லி ஹெட் கிளார்க்கினிடம் கூறினார். அப்பாவும் உங்களுக்குத் தனியாக ஒரு கடிதம் எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். தெய்வம் நம்மைக் கைவிட்டு விடவில்லை. நீங்கள் இங்கு வந்து எங்கள் கல்லூரியில் பணிபுரியப் போகிறீர்கள் என்ற ஞாபகத்தையே கொண்டாடும் மனத்தோடு நான் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். நான்கூடத் 'தமிழ் குரூப் எடுத்துக்கொள்ள தீர்மானம் செய்து விட்டேன். அப்பாவிடம் அவர் சம்மதிக்கிற சமயம் பார்த்து ஒரு வார்த்தை சொல்லிச் சம்மதம் பெற்ற பின் நிச்சயமாகத் தமிழ்ப் பிரிவில் நானும் சேர்ந்து விடுவேன். உங்களிடம் மாணவியாக இருந்து படிப்பது ஒரு பாக்கியம். இனி அது எனக்குக் கிடைக்கப் போகிறது. 'ஆர்டர் கிடைத்ததற்கு நன்றி தெரிவித்து அப்பாவுக்கு ஒரு வரி எழுதி விடுங்கள். கல்லூரி திறக்கும் நாளன்று உங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/166&oldid=595136" இலிருந்து மீள்விக்கப்பட்டது