பக்கம்:பொன் விலங்கு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 171

தம்பி...' என்று சொல்லி அந்தச் சிறுவனை அனுப்பி வைத்தான் அவன். அந்தச் சிறுவனோடு பேசிக் கொண்டிருந்த போதுகூட அரங்கிலிருந்து ஒலிக்கும் இனிய குரலும் மாறிமாறி ஒலிக்கும் சலங்கை ஒலியும் வந்து செவிகளை நிறைத்துக் கொண்டுதான் இருந்தன. வளைகளும், சலங்கைகளும் ஒசையிட அவள் கொடிபோல் துவண்டு நயமாக ஆடிய நாட்டியம் அவன் இதயத்தைக் கவர்ந்தது. அந்த நாட்டிய நிகழ்ச்சியின் முதற்பகுதியாகவும் முக்கியமான பகுதியாகவும் இருந்தது ஆண்டாள் நடனம்தான். அதன்பின் பாம்பாட்டி நடனம், மார்வாரி நடனம் என்று வேறு சில நிகழ்ச்சிகளும் தொடர்ந்தன. அவையெல்லாம் அவளுடைய ஆண்டாள் நடனத்தைப் போல் சத்தியமூர்த்தியின் மனத்தைத் தொட்டு உருகச் செய்யவில்லையாயினும், கலைத் திறனையும் அவள் அழகின் பல நிலைகளையும் அவன் புரிந்து கொள்ளத் துணை செய்தன. இயற்கையாகவே அவளுடைய கலைத்திறன் அவ்வளவு சிறப்புடையதா அல்லது தன்னைப்போல் அவளுடைய அந்தரங்கத்தில் இடம் பெற்றிருக்கிற ஒர் இரசிகன் எதிரே வந்து உட்கார்ந்ததனால் தனக்காகவே அவ்வளவு சிறப்பாக அது அமைந்ததா என்று நுணுக்கமாக எண்ணிப் பார்த்தான் சத்தியமூர்த்தி. ஒவ்வொன்றாக ஞாபகம் வந்து அவளைப் பற்றிய கவர்ச்சியையும் மயக்கத்தையும் அவன் மனத்தில் அதிகமாக்கின. அவளுடைய கைகள் சேர்ந்தும், பிரிந்தும் முத்திரை பயின்றபோதெல்லாம் நிலவின் கதிர்களிலிருந்து கொய்த தளிர்களைப்போல் இலங்கிய விரல்களின் எழிலை நினைப்பதா? எதை நடித்துக் கொண்டிருந்தாளோ அதனுடைய பாவனைகளை அப்படியே மாற்றமின்றிப் பேசும் அவள் கண்களை நினைப்பதா? பாதரசங்களின் காட்சியழகும் சலங்கைகளின் ஒசை அழகுமாக அவளுடைய கால்கள் மான் துள்ளியது போல் துள்ளிய வேளைகளில் கூடியிருந்தவர்களின் மனங்களையெல்லாம் அவள் துள்ள வைத்த விந்தையை நினைப்பதா? எதை நினைப்பது? எதை நினைக்காமல் விடுவது? பரத நாட்டியம் பார்ப்பதற்காக ஓரிடத்தில் இரண்டு மணிநேரம் சேர்ந்து உட்கார்ந்தது என்பது சத்தியமூர்த்தியின் வாழ்க்கையிலும் இதுவே முதல் தடவை. இன்று. இந்தக் கலை அவனை வசியம் செய்து கட்டுப்படுத்தி விட்டது. குமரப்பனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/173&oldid=595152" இலிருந்து மீள்விக்கப்பட்டது