பக்கம்:பொன் விலங்கு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பொன் விலங்கு வாழையருகே தனியாய் நின்று தன்னை வரவேற்றுப் புன்னகை பூக்கும் மோகினி, மாம்பூ மணக்கும் சித்திரை மாதத்து இளங்காற்று, எல்லாமாகச் சேர்ந்து அப்போது சத்தியமூர்த்தியைப் பரவசப்படுத்தியிருந்தன. அவன் மனம் மிக மிக உற்சாகம் உற்றிருந்தது.

'வாருங்கள்! உங்களை எதிர்பார்த்துத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்' என்று கை கூப்பினாள் மோகினி. அவளை எப்படியெப்படியெல்லாமோ புகழ்ந்து தன் பார்ாட்டுதல்களைத் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த சத்தியமூர்த்தி, “உங்களுக்கு என் பாராட்டுதல்கள், மிகவும் நன்றாக ஆடினிர்கள். கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கு அருளுகண்டாய் என்று இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பத் கதறுகிறாற்போல் பாடிக் கொண்டே நீங்கள் ஆடியபோது எனக்குக் கண் கலங்கிவிட்டது' என்று சுருக்கமாக ஏதோ சொன்னான். அவனுடைய பாராட்டுதலைக் கேட்டு அவள் முறுவல் செய்தாள். நாட்டியக் கோலத்தில் இருந்த ஆடையலங்காரங்களைக் களைந்து விட்டு ரோஸ் பவுடர் பற்றியிருந்த நிறம் போயும் போகாமலும் சோப்பினால் அவசரம் அவசரமாக முகம் கழுவிய பின்பு அதிகக் 'கவர்ச்சியில்லாத ஏதோ ஒரு துணிப் புடவையைக் கட்டிக் கொண்டு

வந்து நின்ற தோற்றத்திலும் அவள் அழகாகத்தான் இருந்தாள். - "நான் நன்றாக ஆடியதற்குக் காரணமே நீங்கள் என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள் என்ற பலத்தினால்தான். எதிரே அவையில் உட்கார்ந்து கொண்டிருந்த அத்தனை ஆயிரம் பேருக்காகவும் நான் ஆடவில்லை. உங்களுக்காகத்தான் ஆடினேன். நீங்கள் என்னைக் காப்பாற்றிய தெய்வம். இன்றைக்கு நீங்கள் வராமல் என்னை ஏமாற்றி விடுவீர்களோ என்ற பயம் மேடைக்கு வந்து நிற்கிற வரை எனக்கு இருந்தது. நீங்கள் வந்திருக்கிறீர்களா என்று அறிவதற்காக அந்தப் பையனை இரண்டு மூன்று முறை கீழே போய்ப் பார்த்து வரச்சொல்லித் துரத்தினேன். நீங்கள் வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று அறிந்த பின்புதான் எனக்கு நம்பிக்கையே வந்தது."

"நான் ஒன்றும் அவ்வளவு பெரிய கலா இரசிகன் இல்லை. நான்

பார்க்கிற முதல் நாட்டியமே இதுதான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/176&oldid=595158" இலிருந்து மீள்விக்கப்பட்டது