பக்கம்:பொன் விலங்கு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 பொன் விலங்கு

"எனக்காக நீங்கள் வேலை எதுவும் தேடித்தரவேண்டாம் சார் நாம் அப்புறம் பார்க்கலாம்." என்று கூறிவிட்டு அவரைச் சந்திக்க நேர்ந்ததை வெறுப்பவன் போல் விறுவிறுவென்று மேலே நடந்து வெளியே வந்தான் சத்தியமூர்த்தி. வருகிற வழியில் கிரின் ரூமுக்கு அருகே நின்று கொண்டிருந்த மோகினியின் தாய் வேறு அவனைப் பார்த்து முகத்தைச் சுளித்தாள்.

'என்னப்பா இது? ஐந்து நிமிடத்தில் வருகிறேன் என்று போனவன் அரை மணி நேரத்துக்கு மேல் ஆக்கிவிட்டாய்?" என்று கேட்டுவிட்டுச் சிறிது மெளனத்திற்குப் பின் தணிந்த குரலில், 'மோகினியைத் தெரியுமா உனக்கு?' என்று மேலும் சத்திய மூர்த்தியை வினவினான் குமரப்பன்.

'தெரியும் அவளை நான் சந்தித்தது ஒரு விநோதமான சம்பவம்' -

'எனக்குத் தெரியக்கூடாத சம்பவமானால் சொல்ல வேண்டாம். நான் உன்னைக் கேட்டதற்காக மன்னித்து விடு, சத்யம்...!" -

"அப்படி ஒன்றும் இல்லை. நானே சொல்கிறேன்." -நேரம் அதிகமாகிவிட்டதனால் அவர்கள் இருவரும் பொருட்காட்சி மைதானத்திலிருந்த ஓர் உணவு விடுதியில் நுழைந்து இரவுச் சாப்பாட்டை முடித்தார்கள். மைதானத்திலிருந்து கிழக்கே திரும்பிப் பார்த்தால் சாலையின் கிழக்குக் கோடியில் சித்திரை மாதத்து முழு நிலாவின் கீழ் காந்திமண்டபம் இருபுறமும் அணிவகுத்து நிற்கும் நெட்டுலிங்க மரங்களிடையே தாஜ்மகாலைப்போல் அற்புதமாகத் தோன்றிக் கொண்டிருந்தது. தெற்கே மரக் கூட்டங்களுக்குள்ளே அமெரிக்கன் கல்லூரிக் கட்டிடங்கள் உறங்கின. சாலைகளில் எல்லாம் சித்திரைத் திருவிழாக் கூட்டம் நிறைந்திருந்தது. திரும்பிப் போகும்போது கல் பாலத்தில் போகாமல் இன்னும் மேற்கே தள்ளிப்போய் வையையில் குறுக்கே இறங்கி நடந்தார்கள் குமரப்பனும் சத்தியமூர்த்தியும். சித்திரைத் திருவிழாவின் பரபரப்பும், கலகலப்பும் பாலத்துக்குக் கிழக்கேதான் அதிகமாயிருந்தன. பாலத்தின் மேற்குப் பக்கம் வையை மணற் பரப்பு அமைதியாயிருந்தது. ஒர் ஒடுகாலின் கரையில் குவித்திருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/178&oldid=595162" இலிருந்து மீள்விக்கப்பட்டது