பக்கம்:பொன் விலங்கு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 181

போர்டு மாட்டிக் கொள்ள வேண்டிய மனிதர் ஒருவர் நான் பணி புரியப் போகிற மல்லிகைப் பந்தல் கல்லூரியில் இருக்கிறார் என்பதற்காகச் சொல்ல வந்தேன்."

"அப்படி மனிதர்கள் இல்லாத இடம் உலகத்தில் எங்கேதான் இருக்கிறது? விட்டுத் தள்ளு. போய் நன்றாகத் துங்கு' என்று சத்தியமூர்த்தியின் வீட்டு வாசலில் அவனுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டுப் புறப்பட்டான் குமரப்பன்.

'இவ்வளவு அருமையான நண்பனைப் பிரிந்து வெளியூர் செல்லப் போகிறோமே என்று எண்ணியபோது சத்தியமூர்த்தியின் இதயம் அழுதது. கல்லூரி நாட்களின் இனிய அநுபவங்களையும். இலட்சியம்' என்ற பெயரில் நண்பர்களாகச் சேர்ந்து கையெழுத்துப் பத்திரிகை நடத்தியதையும், அந்தக் கையெழுத்துப் பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் குமரப்பன் வழக்கமாக வரையும் கேலிச் சித்திரங்களையும் நினைத்தான் சத்தியமூர்த்தி. அந்தக் கையெழுத்துப் பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் 'ஏமாற்றம்' என்ற தலைப்பில் வழக்கமாகக் கேலிச் சித்திரங்களை வரைவான் குமரப்பன், ஏமாற்றம்-1, ஏமாற்றம்-2 என்று இப்படி வரிசையாக அதே தலைப்பில் அந்தக் கேலிச் சித்திரங்கள் வரும். ஒரு நாள் சத்தியமூர்த்தியும் மற்ற நண்பர்களும், "இந்தாகுமரப்பன் ஏமாற்றம் என்ற தலைப்பில்தான் படம் போடுவாய் என்றால் இனிமேல் நீ நம் கையெழுத்துப் பத்திரிகையில் ஒரு படமும் போடவேண்டாம் அப்பா...' என்று அவனைக் கண்டித்துப் பார்த்தார்கள்.

“என்னட இது? இதற்கா இப்படிக் கோபித்துக்கொள்கிறீர்கள்? முதல் பக்கத்தில் இலட்சியம் என்று பத்திரிகையின் பெயரை எழுதியிருக்கிறீர்கள் நான் கடைசிப் பக்கத்தில் ஏமாற்றம் என்று அது முடிகிற இடத்தை விளக்குகிறேன்..." என்று குத்தலாகப் பதில் சொல்லிக் கூடியிருந்தவர்களிடையே சிரிப்பலைகளைக் கிளப்பினான் அவன். பிறவியிலேயே அவன் கேலிச் சித்திரக்காரன்தான். கண்ணாயிரத்தைப் பற்றி ஒரு நாள் அவன் கூறிய கருத்தை இப்போது சிந்தித்தான் சத்தியமூர்த்தி. நினைக்க நினைக்கச் சிரிப்பு மூட்டுவதாக இருந்தன, குமரப்பனின் அந்த வாக்கியங்கள். மறுபடியும் அவற்றை நினைத்தான் சத்தியமூர்த்தி, "இந்தக் கண்ணாயிரம் இருக்கிறாரே, அவர் விலாங்கு மீனைப் போன்றவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/183&oldid=595174" இலிருந்து மீள்விக்கப்பட்டது