பக்கம்:பொன் விலங்கு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 183

சிரிக்க நிறையப் பேசினான். வேறு சில நண்பர்களும் பேசினார்கள். மதுரையைப் பிரிந்து வெளியூர் போகவிருப்பதை நிச்சயமாக ஞாபகப் படுத்துவதைப்போல் அந்த விருந்தும் நடந்து முடிந்துவிட்டது. அது மகிழ்ச்சியா வேதனையா என்று புரிய முடியாத நிலை. உணவு விடுதியில் விருந்து முடிந்து வீடுதிரும்பும்போது அவன் தவிக்கும் மனத்தோடுதான் திரும்பினான். தந்தை வீட்டுத் திண்ணையில் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தார். 'வா, சத்தியம்! இதில் நீ கையெழுத்துப் போட வேண்டியதில்லை என்று நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாச்சு கண்ணாயிரம் கேட்கிற வழியாயில்லை. "எதற்கும் பையனிடமும் ஒரு கையெழுத்து வாங்கிவிடுங்கள்' என்கிறார். நீயும் போட்டுவிடேன்' என்று பத்திரக் காகிதத்தை நீட்டினார் தந்தை. வீட்டை அடமானமாக வைத்துக் கண்ணா யிரத்தினிடம் கடன் வாங்குவதற்காக எழுதப்பட்ட பத்திரக் காகிதம்

"கொஞ்சம் பொறுத்துக் கொண்டு செய்யலாமே அப்பா கண்ணாயிரம் பின்னால் எப்படியெப்படி நடந்து கொள்வாரோ?'என்று அவன் கூறிய சொற்களைத் தந்தை கேட்கவில்லை. விரும்பவும் இல்லை. -

'கையெழுத்துப் போடு சொல்கிறேன்" என்று வற்புறுத்தினார். அந்த நிலையில் தந்தையைப் பகைத்துக் கொள்ள முடியாத காரணத்தால் அவர் என்ன சொன்னாரோ அதைச் சொன்னபடியே செய்தான் சத்தியமூர்த்தி.

14.

米 நினைப்பையும், செயலையும், சொல்லையும் சத்தியமாக அளவிட்டுக் கணித்து-அந்தக் கணிப்பினால் மட்டுமே . மனிதர்களின் சாதியைப் பிரிப்பதாக இருந்தால் தூய்மை உள்ளவர்கள், தூய்மை அற்றவர்கள் என்று இரண்டே

இரண்டு சாதிகள் மட்டும்தான் பிரியும்.

! 米

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/185&oldid=595178" இலிருந்து மீள்விக்கப்பட்டது