பக்கம்:பொன் விலங்கு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 பொன் விலங்கு

விடை கொடுத்து அனுப்புங்கள். மறுபடி எப்போது சந்திக்க நேர்கிறதோ அப்போது சந்திக்கலாம். நீங்கள் இப்படி அநாவசியமாகக் கண்கலங்கித் தவித்தால் நான் வருத்தத்தோடு விடைபெற்றுத் திரு வேண்டியிருக்கும். நீங்கள் எனக்கு மகிழ்ச்சியோடு விடைகொடுக்கவேண்டும். முதல் முதலாக உங்கள் வீட்டைத் தேடி வந்திருக்கிறேன்..." -

'அதனால்தான் இப்படி நடையிலேயே நின்று பேசி விட்டுப் போகப் பார்க்கிறீர்கள் போல் இருக்கிறது."

"எனக்கு நேரமாகிறது. நான் அவசரமாகப் போக வேண்டும். நண்பன் ஒருவனைச் சந்தித்து அழைத்துக் கொண்டு அவனோடு கடைகளுக்குப் போக வேண்டும்" என்றான் சத்தியமூர்த்தி.

'உண்மைதான் என்னைப்போல் ஒவ்வொருநாளும் நரக வேதனைப்பட்டுக் கொண்டு தவித்தும் ஏங்கியும் வாழ்கிறவர் களுக்குச் சில சமயங்களில் மற்றவர்களுடைய அவசரம் புரியாமல்தான் போய் விடுகிறது. இந்தப் பையனைக் காப்பி, சிற்றுண்டிவாங்கிவர அனுப்பியிருக்கிறேன்.இன்னும் சிறிதுநேரத்தில் அம்மா வெளியிலிருந்து வந்ததும் பையனைத் துணைக்கு அழைத்துக்கொண்டு கோயிலுக்குப் போக வேண்டும். அம்மா வந்து விட்டாலோ நீங்களும் நானும் இப்படி நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாலே காளி சொரூபம் எடுத்துவிடுவாள். அவள் யார் யாரிடம் எவ்வளவு நேரம் நின்று சிரித்துப் பேசச் சொல்கிறாளோ அவர்களிடம் மட்டும்தான் நான் பேச வேண்டும். உங்களோடு பேச வேண்டுமென்று எனக்கே ஆசையாக இருக்கிறது. நீங்களோ வாசலில் ஒரு காலும் உள்ளே ஒரு காலுமாகப் பறந்துகொண்டு நிற்கிறீர்கள்." - -

இவ்வளவு சொல்லி வேண்டிக்கொண்ட பின்பும் அவள் மனத்தைப் புண்படுத்துவது அழகில்லை என்று கருதியவனாக உள்கூடத்தில் போய் உட்கார்ந்தான் சத்தியமூர்த்தி, கூடம் முழுவதும் சிமெண்டுத் தரையில் பளீரென்று தெரிகிறாற் போல் மாக்கோலம் போட்டிருந்தது. மோகினியின் பெரிய பெரிய புகைப்படங்கள் இரண்டு மூன்று அவள் பலவித நிலைகளில் நாட்டியமாடும் கோலத்தில் எடுக்கப்பெற்றுக்கூடத்துச்சுவரில் மாட்டப்பெற்றிருந்தன;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/194&oldid=595199" இலிருந்து மீள்விக்கப்பட்டது