பக்கம்:பொன் விலங்கு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 பொன் விலங்கு

"இந்த வீட்டில் நீங்கள் எடுத்து வாசிப்பதற்காகவே உங்கள் காலடியில் காத்துக்கொண்டிருக்கும் வாத்தியம் இதோ இருக்கிறது" என்று தன் நெஞ்சைத் தொட்டுக் காண்பித்துவிட்டு அவனைக் கைகூப்பினாள் அவள். அப்போது அவளுடைய கண்களில் தெரிந்த தாபமும், தாகமும் எத்தனை எத்தனையோ யுகங்களாக இந்தச் சந்திப்புக்குக் காத்திருப்பதுபோல் தன்னுடைய பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒத்திக்கொண்ட போது எந்த எதிர்பாராத உணர்ச்சி சத்தியமூர்த்திக்கு ஏற்பட்டதோ, அதே உணர்ச்சிதான் இப்போதும் ஏற்பட்டது.

"பிரிந்து வெளியூர் ப்ோகப் போவதைச் சொல்லிக்கொண்டு போகவந்தால் என்றும் பிரியமுடியாத பந்தத்தைச் சொல்லி நீங்கள் என்னைத் தடைப்படுத்துவது நியாயமா?' என்று சிரித்துக் கொண்டே கேட்டான் சத்தியமூர்த்தி.

"மன்னிக்கவேண்டும் உங்கள் முன்னிலையில் நான் எதற்காக இப்படி மனமும் உணர்ச்சிகளும் நெகிழ்ந்து போய்த் தவிக்கிறேன் என்று எனக்கே புரியவில்லை. இது ஏதோ பழம் பிறவித் தொடர்பாயிருக்க வேண்டும். இரயில் கதவைத் திறந்து கொண்டு கீழே குதித்து ஒரேயடியாகச் செத்துத்தொலைந்து போய்விட இருந்தவளைப் பின்னாலிருந்து கையைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றினீர்களே? எதற்காகக் காப்பாற்றினீர்கள்? இருந்து என் கழுத்தை அறுக்கிறதுக்குப் பதில் நீ ஒரேயடியாகச் செத்துத் தொலையறதே மேல் என்று சொல்லிப் பெற்ற தாயே கைவிட்டு விட்டவளை நீங்கள் எதற்காகக் குறுக்கிட்டுக் காப்பாற்றினிர்கள்? மேளம் கொட்டாமல், நாதஸ்வரம் வாசிக்காமல், அந்த அதிகாலை நேரத்தில் ஓடும் இரயிலில் பாணிக்கிரகணம் செய்து கொண்டது போல் என் வலது கையைப் பிடித்து இழுத்தீர்களே - அப்போது எனக்கு எந்த ஞாபகம் வந்தது தெரியுமா? ஆண்டாள் கண்ணனைத் திருமணம் புரிந்து கொள்வதாகக் கனவு கண்டு பாடிய 'வாரணமாயிரம் பாடல்கள் நினைவு வந்தன. 'கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்' என்று அப்போது என் இதயம் எனக்கு மட்டுமே கேட்கிற குரலில் பாடிக் கொண்டிருந்தது. பிடித்த கையைப் பாதியில் இழுத்து முறித்துக் கொண்டு போகலாமா நீங்கள்? நீங்கள் மல்லிகைப் பந்தலுக்குப் போனாலும் சரி, வேறு ஏதாவது ஓர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/196&oldid=595203" இலிருந்து மீள்விக்கப்பட்டது