பக்கம்:பொன் விலங்கு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 பொன் விலங்கு

போக அநுபவங்கள் முடிச்சுப்போடுவது போலத்தான், இருக்கும்போதே முந்திய முடிச்சைத் தளர்த்திவிட்டு இறுகும். என் அநுபவத்தில் பலமுறை இதை நான் உணர்ந்திருக்கிறேன். அத்தகைய பெரிய அநுபவங்களை நீ அடைய அடையக் 'குமரப்பன்' என்ற கார்டூனிஸ்ட்டை மறந்தாலும் மறந்து விடுவாய்.யார் கண்டார்கள்?" -

'அப்படிச் சொல்லாதே, குமரப்பன் உன்னை மறக்கக் கூடாதென்பது என் தவம். அது ஒரு போதும் வீணாகாது" என்று சத்தியமூர்த்தி உறுதிதொனிக்கும் குரலில் நண்பனிடம் கூறினான். மறு நாளும் மாலையில் நண்பர்கள் இருவரும் சந்தித்து நெடுநேரம் பேசினார்கள். அதற்கு அடுத்த நாளும் பேசினார்கள். சத்தியமூர்த்தி, ஊருக்குப் புறப்படும் நாள் நெருங்க நெருங்க அவர்கள் சந்தித்துப் பேசும் நேரமும் வளர்ந்தது. ஊருக்குப் புறப்படும் நாளுக்கு முதல் நாள் மாலை குமரப்பனைத் தேடிச் செல்லும்போதே மோகினியிடம் சந்திக்க வருவதாக ஒப்புக் கொண்டிருந்ததை நினைவு கூர்ந்தான் சத்தியமூர்த்தி, ஊருக்குப் போவதைச் சொல்லிக் கொள்ள மோகினியிடம் சென்றதையும் அப்படிச் சென்றிருந்தபோது அங்கு நிகழ்ந்தவற்றையும் குமரப்பனிடம் சொல்வதற்கு வாய்க்கவில்லை. ஆனால் குமரப்பனாகவே நடுவே ஒரு நாள் அவளைப்பற்றிச் சத்தியமூர்த்தியிடம் சில வார்த்தைகள் பேசியிருந்தான்.

'அந்தப் பெண்ணுக்கு அவள் மேற்கொண்டிருக்கும் கலைத்துறையில் நல்ல எதிர்காலமும் புகழும் இருக்கின்றன. அந்தக் கலையை உயர்ந்த தரமாகவும் படித்துக் கொண்டிருக்கிறாள். இந்தக் கண்ணாயிரம் குறுக்கே புகுந்து பாழாக்கிவிடாமல் இருக்க வேண்டும். இவன் ஏதோ மஞ்சள்பட்டியார் தலையைத் தடவி இரண்டு மூன்று லட்ச ரூபாய் முதல் போடச் சொல்லி மூன்லைட் பிக்சர்ஸ் என்றோ அமாவாசை பிக்சர்ஸ் என்றோ படத் தயாரிப்புக் கம்பெனி ஆரம்பிக்கப் போகிறானாம். மோகினியும் பார்க்க இலட்சணமாக இருக்கிறாள். அவளுடைய அம்மாக்காரி கண்ணாயிரம் சொல்கிறபடிதலையாட்டுகிறாளாம். தங்க விக்கிரகம் போலப் பார்க்கிற எவனுக்கும் விரசமாக எந்த எண்ணமும் தோன்ற இடம் இல்லாதபடி ஏதோ நல்ல நாட்டியம் ஆடிக் கொண்டிருக்கிறது அந்தப் பெண். சினிமாவில் நடிக்கப் பண்ணுகிறேன் என்று கண்ணாயிரம் பாழாக்கி விடப் போகிறான். கண்ணாயிரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/206&oldid=595227" இலிருந்து மீள்விக்கப்பட்டது