பக்கம்:பொன் விலங்கு.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 209

குறைத்து தன்னைத் தனியாகப் பிரித்து நிறுத்திக் கொள்ளும் அதிகப்படியான மரியாதையைவிட மரியாதையைக் குறைத்து அன்பால் பெருகி நெருங்கும் உரிமையையும், உறவையும் அவள் பெரிதும் விரும்பினாள். ஆனால் அதே சமயத்தில் சத்தியமூர்த்தி அவசரத்தினாலும் பதற்றத்தினாலும் அவளை அப்படி அழைத்ததற்காகத் தனக்குள் மனம் குழம்பிக் கொண்டிருந்தான். 'எல்லாவிதமான கட்டுப் பாட்டையும் மீறி, என் வாய் எப்படிக் குழறியது?- நான் எப்படித் தடுமாறினேன்? என்று எண்ணியபடி அவன் மனம் வருந்திக் கொண்டிருந்தபோது தன்னுடைய வார்த்தைகளால் மோகினி அவனுடைய வருத்தத்தைத் தவிர்த்தாள். அவளுடைய அந்தப் பணிவும் விநயமும் அவனுடைய பரவசத்தை மிகுதியாக்கின.

"நீங்கள் இப்படி வா, போ என்று உரிமையோடு ஒருமையில் அழைக்காமல், உயரத் தூக்கி வைத்து அநாவசியமாக மரியாதை கொடுத்து நேற்றுவரை என்னைத் துன்புறுத்திக் கொண்டிருந்தீர்கள். இன்றுதான் நான் செளபாக்கியவதியானேன். சொல்லட்டுமா? என்று நான் உங்களைக் கேட்டவுடன் சொல்லேன்' என்று ஒருமையில் பதில் வந்ததே உங்களிடமிருந்து-அந்த வார்த்தையை என்செவிகள் கேட்க நேர்ந்தநல்ல வேளையை நான்வாழ்த்துகிறேன்.இனிமேல் இப்படியே அழையுங்கள். இப்படி அழைக்கப்படுவதில்தான் நான் மகிழ்ச்சியை உணர்கிறேன். அதோ எதிரில் உள்ள நிலைக் கண்ணாடி உங்களையும் என்னையும் சிறிதும் வஞ்சகமில்லாமல் மணமக்களைப் போல் பிரதிபலிக்கிறது பார்த்தீர்களா? இந்தமோதிரத்தைமுதன்முதலாகஇந்த வீட்டுக்குள் நீங்கள்நுழைந்ததினத்தன்றே உங்கள்விரலில் அணிவிக்க எண்ணியிருந்தேன். ஆனால் அப்போது இதில் இந்த நீலக்கல் உதிர்ந்திருந்தது. கல்லையும் பதித்து மோதிரத்துக்கு மெருகுகொடுத்து வாங்குவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. இதற்காகத்தான் நீங்கள் ஊருக்குப் போவதற்குள் உங்களை மறுமுறையும் சந்திக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். நீங்களோ உங்கள் கையில் உள்ள மோதிரத்தைக் கழற்றிப் பதிலுக்கு என் கையில் அணிவித்து விட்டீர்கள். என்னுடைய அம்மாவின் பெரியம்மா ஒருத்தி எனக்குப் பெரிய பாட்டி முறையாக வேண்டும், மதுரவல்லி என்று பெயர். அவள் தன்னுடைய பதினேழாவது வயதில் பக்கத்து

பொ. வி - 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/211&oldid=595239" இலிருந்து மீள்விக்கப்பட்டது