பக்கம்:பொன் விலங்கு.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 பொன் விலங்கு

உன்னுடைய வேண்டுகோளை மறுக்க முடியாமல்தான் இந்த மோதிரத்தை அணிந்து கொண்டேன். உன்னுடைய அன்புக்கு மரியாதை செய்ய வேண்டுமென்றுதான் பதிலுக்கு என் கை மோதிரத்தை உனக்கு அணிவித்தேன். நீ எனக்குச்சிரித்த முகத்தோடு விடை கொடுக்க வேண்டும்..."

அவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். கண்களைத் துடைத்துக்கொண்டு உள்ளே சென்றாள். மறுபடியும் அவள் திரும்பி வந்தபோது கையில் ஒரு சிறிய குங்குமச் சிமிழோடு வந்தாள். தன் கையினாலேயே அவன் நெற்றியில் திலகமிட்டாள்.

'போய்வாருங்கள், என்னை மறந்து விடாதீர்கள், உங்கள் ஞாபகத்தில் தங்கி வாழ்வதைக் காட்டிலும் பெரிய பாக்கியம் எனக்கு வேறு ஒன்றும் இல்லை" என்று நாத்தழுதழுக்கக் கூறிக் கண் கலங்கக் கைகூப்பினாள் மோகினி, பிரிய மனமில்லாமல் அவளைப் பிரிந்தான் அவன். மேலே நடந்து போக முடியாமல் தயங்கி நிற்கும்படி செய்து விடுகிற அன்பு யாருடையதாக இருந்தாலும் அந்த அன்புக்கு நெகிழ்ந்தும் நெகிழாமலும் அதிலிருந்து விலகி நடக்கத்தான் வேண்டியிருக்கிறது. தான் அந்தச் சந்திலிருந்து திரும்பி மறைகிற வரை அவள் வீட்டு வாயிற் படியிலேயே நின்று பார்த்துக் கொண்டிருப்பதை இரண்டொரு முறை பின் பக்கமாகத் திரும்பிப்பார்த்தபோது அவன் கண்டான். வேகமாகக் கைவீசி நடந்தபோது புது மெருகும் நீலக் கல்லுமாக மின்னியது அந்த மோதிரம்."இதென்னடா புது மோதிரம்?" என்று குமரப்பன் கேட்டால் என்ன மறுமொழி கூறுவது? வீட்டுக்குப் போய் நின்றால் அம்மாவோ தங்கையோ கூட அந்தக் கேள்வியை அவனிடம் கேட்கமுடியும்.

யார் யாரிடம் எப்படிப் பதில் சொல்வது என்று அவன் இப்போதே சிந்திக்கத் தொடங்கினான். ஏற்கெனவே கையிலிருந்த பழைய பொன்மோதிரத்தைக் கடையில் கொடுத்துவிட்டுத் தானே மேலும் கொஞ்சம் ரூபாய் கொடுத்து இதை மாற்றிக் கொண்டுவிட்டதாகச் சொல்லிக் கொள்ளலாமென்று அவனுக்குத் தோன்றியது. யாருக்கும் கெடுதல் செய்யாத, இந்தப் பொய்யை எண்ணுவதற்கும் பேசுவதற்கும் கூட அவன் கூசினான். தான் இப்படிப் பொய் சொல்லவேண்டிய நிலையை உண்டாக்கியவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/214&oldid=595245" இலிருந்து மீள்விக்கப்பட்டது