பக்கம்:பொன் விலங்கு.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பொன் விலங்கு

பார்க்கத் தவித்துப் பார்த்ததுவும்

பாரா திருந்தே தவித்ததுவும் யார்க்கும் தெரியா திணைந்ததுவும்

யாரும் அறிந்தே பிரிந்ததுவும் பேசத் தவித்துப் பேசியதுவும்

பேசா திருந்தே தவித்ததுவும் நேசம் தெரிந்து மணந்ததுவும்

நீசர் கலைக்கக் கலைந்தனவே கவிதை இன்பத்துக்காக நூறு பாடல்களே உள்ள அந்தப் புத்தகத்தை ஏழெட்டுமுறை படித்திருக்கிறாள் அவள். இப்போதும் அவளுக்கு விருப்பமான அந்தப் பாட்டுத்தான் நினைவு வந்தது. அந்தப் புத்தகத்தின் பெயரே ஞாபக மலர்கள் என்று வைக்கப் பட்டிருந்தது. சென்ற வருடம் அவளுடைய பிறந்த நாளன்று கல்லூரித் தோழி ஒருத்தி இந்த ஞாபக மலர்களை அவளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தாள் பார்க்கத் தவித்துப் பார்த்ததுவும், பாராதிருந்தே தவித்ததுவும் என்ற ஒரு வரியைப் பாரதி இப்போது திரும்பத் திரும்ப நினைத்தாள்.

சத்தியமூர்த்தியின் இந்தப் பாதங்களைப் பார்க்கும் போதும் அவள் தவித்தாள். பார்க்கமுடியாத போதும்தான் அவள் தவித்தாள். இந்த உணர்ச்சியை அந்தக் கவி எவ்வளவு அழகாகச் சொல்லி யிருக்கிறார்?

'வழி விடுகிறீர்களா? உள்ளே போய் உடை மாற்றிக் கொண்டு வந்துவிடுகிறேன்' என்று கேட்டுக் கொண்டே அவன் மிக அருகில் வந்துவிட்டபிறகுதான் அவள் சுய நினைவு வரப்பெற்று விலகிநின்று அவனுக்கு வழிவிட்டாள். பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்து சத்தியமூர்த்தி உடைமாற்றிக் கொண்டு மின்னல் எதிரே வந்து நிற்பது போல பளீரென வெண்மையுடுத்தி நின்றான். சிரித்துக் கொண்டே அவளிடம் பேசலானான் அவன்: 'உங்களுக்கு மிகவும் சிரமம் கொடுத்துவிட்டேன். நீங்கள் என்னைத் தேடிக்கொண்டு இங்கேயெல்லாம் வந்து நிற்பீர்களென்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் இன்று காலையில் ரும் தேடி வந்தபோது இந்த இடம் அகப்பட்டது. உடனே முன்பணம் கொடுத்துப் பேசிக் கொண்டபின் இங்கே குடியேறிவிடத் தீர்மானித்தேன். விடிந்ததும், பிரின்ஸிபாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/230&oldid=595281" இலிருந்து மீள்விக்கப்பட்டது