பக்கம்:பொன் விலங்கு.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 பொன் விலங்கு

நாலைந்து மனிதர்களை எதிரே உட்கார்த்திப் பேசிக் கொண்டிருந்தார். சத்தியமூர்த்தி உள்ளே வந்து நிற்பதைக் கவனிக்கவே அவருக்குக் கால் மணி நேரத்துக்கு மேல் ஆயிற்று. அவன் பக்கமாகத் திரும்பி நிமிர்ந்து பார்த்தவர், "ஒ..." என்று வியந்தவர் போல் சிரித்துவிட்டுச் சிறிது நேரம் நிரம்பவும் பரபரப்பாக இருப்பதற்கு அடையாளமாக ஒர் அர்த்தமுமின்றி மேஜை மேல் இந்தப் பக்கமாக இருந்த பைல் கட்டுகள் சிலவற்றை அந்தப் பக்கமாக நகர்த்தி வைத்து விட்டுப் பியூனை ஆத்திரத்தோடு கூப்பிடுகிறவராய் மணியை உள்ளங் கையால் இரண்டு தரம் ஓங்கித் தட்டியபின் சத்தியமூர்த்தியை நோக்கி மேலும் கூறினார்:

"எக்ஸ்க்யூஸ் மீ.....நெள ஐ ஆம் வெரி பிலி வித்...தி...நியூ அட்மிஷன்ஸ்...யூ ப்ளீஸ் மீட் மிஸ்டர் சிதம்பரம் அவர் காலேஜ் ஹெட்கிளார்க்...ஹி வில் மேக் நெஸஸ்ஸ்ரி அரேன்ஜ்மென்ட்ஸ் டு ரெஸில் யுவர்.ஜாயினிங் ரிப்போர்ட்'-இவ்வாறு கூறியபடியே வலது கை விரலால் தாடி நுனியைத் திரித்துவிட்டுக் கொள்ளலானார் முதல்வர். மிகவும் இரசிக்கத்தக்க பிருகிருதியாயிருந்த அவரை எண்ணி மனத்துக்குள் சிரித்துக்கொண்டே ஹெட்கிளார்க் சிதம்பரத்தைக் காணப் புறப்பட்டான் சத்தியமூர்த்தி. ஹெட்கிளார்க் வாயெல்லாம் பல்லாகத் தெரியச் சிரித்த முகத்தோடு அவனை வரவேற்றார். 'என்ன சார் அது? விடிந்ததும் விடியாததுமாகப் புறப்பட்டுப் போய் அலைந்து வேறு ரூம் பிடித்துத் தங்கிவிட்டீர்கள் போலிருக்கிறதே? ஆனாலும், நீங்கள் இவ்வளவு அவசரப்பட்டிருக்க வேண்டியதில்லை. இன்னும் இரண்டு நாள் இங்கேயே தங்கிக்கொண்டு நிதானமாகப் பார்த்திருக்கலாமே...?" என்று போலியாக வருவித்துக் கொள்ளப்பட்ட பொய் அநுதாபத்தோடு அவனை விசாரித்தார் ஹெட்கிளார்க்.

"அதைப் பற்றி என்ன வந்தது இப்பொழுது? இரண்டு நாள் பொறுத்துச் செய்யவேண்டிய நல்ல காரியத்தை இன்றே செய்துவிட்டதற்காக வருத்தப்பட ஒன்றுமில்லை. பிரின்ஸிபால் உங்களைப் பார்க்கச் சொன்னார். நான் 'ஜாயினிங் ரிப்போர்ட் கொடுத்துவிட்டு அட்டெண்டன்ஸில் கையெழுத்துப் போட வேண்டும்'- சிரித்துக் கொண்டே சத்தியமூர்த்தி இதைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/236&oldid=595293" இலிருந்து மீள்விக்கப்பட்டது