பக்கம்:பொன் விலங்கு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

பொன் விலங்கு

22 பொன் விலங்கு

"இன்று காலை சரியாகப் பத்து மணிக்கு இங்கே இருக்க வேண்டும் என்று இண்டர்வ்யூ கார்டில் உங்களுக்கு எழுதியிருந்ததாக ஞாபகம்..."

"எழுதியிருந்தபடியே வந்துவிடத்தான் முயன்றேன். ஆனால் பஸ் தவறி விட்டது."

"பஸ் தவறவில்லை. பஸ்ஸை நீங்கள் தவறவிட்டு விட்டீர்கள்."

"..."

இந்த இடத்தில் அவருக்குப் பதில் சொல்வதற்குப் பொருத்தமான வார்த்தைகள் கிடைக்காமல் எதிரே தொங்கிய பச்சைக் கிளிகள் பறக்கும் திரையைப் பார்த்தான் சத்தியமூர்த்தி. அந்தத் திரை சற்றே விலகி நிஜமாகவே ஒரு கிளிக்குஞ்சு தெரிந்தது. விலகி மறைந்த திரையில் இருக்கும் பச்சைக்கிளி ஓர் இளம் பெண்ணாகி ஆனந்தம் பூத்துக்கொண்டிருக்கும் தன் அழகிய கண்களால் இங்கே அறைக்குள் நடந்து கொண்டிருப்பதைக் கண்டு கொண்டிருப்பது புரிந்தது. வெள்ளைச் சலவைக்கல் தரையில் ரோஜா நிறம் பளீரென்று தெரியும்படி முன் நகர்த்தி ஊன்றிக் கொண்டிருந்த தன் சிவப்புப் பாதங்களை அந்தப் பச்சைக் கிளியின் கண்கள் இமையாமல் பார்ப்பது கண்டு கூச்சத்தோடு பின்னுக்கு நகர்த்தி வேஷ்டியின் விளிம்பில் அந்தப் பாதங்கள் மறையும்படி செய்து கொண்டான் சத்தியமூர்த்தி. திரை விழுந்தது. பறக்க முடியாத ஓவியக் கிளிகள் மறுபடி தெரிந்தன. உண்மைக் கிளி திரைக்குப் பின் மறைந்தது. அப்பால் பூபதி அவர்களின் பேச்சு மீண்டும் அவனோடு தொடர்ந்தது.

"மன்னிக்கவேண்டும், மிஸ்டர் சத்தியமூர்த்தி இண்டர்வ்யூக்கள் கல்லூரி அலுவலகத்தில் வைத்தே நடத்தப்படுவது வழக்கம். இன்று என் உடல்நிலை காரணமாக இங்கே மாற்றினேன். அதனால்தான் நீங்கள் நேரம் தவறி வந்ததற்கும் சேர்த்து மன்னிக்கப்படுகிறீர்கள்.இந்த இண்டர்வியூ கல்லூரியிலேயே நடந்து நானும் பத்துமணிக்குச்சரியாக அங்கு வந்திருந்தேனானால் பத்தடித்து ஐந்து நிமிஷம் வரை பார்த்துவிட்டு இண்டர்வியூவைக் கான்சல் செய்திருப்பேன்."

"சார்.. வந்து..." என்று ஏதோ சொல்வதற்காக நிமிர்ந்தான் சத்தியமூர்த்தி. இப்போதும் திரைக்கு அப்பாலிருந்து ஆனந்தம் பூத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/24&oldid=1405649" இலிருந்து மீள்விக்கப்பட்டது