பக்கம்:பொன் விலங்கு.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 பொன் விலங்கு

கையொப்பமிட்டதை ஹெட்கிளார்க் சிறிதும் விரும்பவில்லை என்பதை அவன் உணர்ந்தான். வழக்கமாக எல்லோரும் கையெழுத்துப் போட்டுவிட்டுப் போகிற மாதிரி தானும் போடாமல் அப்படித் திருத்திக் கையொப்பமிட்டது தன்னைப் பற்றி அவர் மனத்தில் ஒரு விரும்பத்தகாத அபிப்பிராயத்தை முதல் பார்வையிலேயே ஏற்படுத்தியிருக்குமென்று அவனுக்குப் புரிந்தது. எல்லோரும் போகிற வழியில் போகாமல் தகுந்த காரணத்தோடு வழி விலகி நடக்கிறவனைப் பிறர் புரிந்துகொள்ள நீண்ட நாட்கள் பிடிக்கும் என்று தோன்றியது. 'ஜாயினிங் ரிப்போர்ட் கொடுத்து முடித்ததும் ஹெட்கிளார்க் அவனை அழைத்துப் போய் வைஸ் பிரின்ஸிபாலுக்கு (துணைமுதல்வர்) அறிமுகம் செய்து வைத்தார். வைஸ் பிரின்ஸிபால் மற்ற ஆசிரியர்களை எல்லாம் அறிமுகம் செய்து வைத்தபின் தமிழ் டிபார்ட்மென்ட் அறைக்கு அவனை அழைத்துச்சென்று அவனுடைய ஹெட் ஆப் தி டிபார்ட்மென்ட்'க்கு அவனை அறிமுகம் செய்தார். மல்லிகைப் பந்தல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் காசிலிங்கனார் எம்.ஏ., பி.ஓ.எல். எம்.லிட்., பி.எச்.டி., அவர்கள் அத்தனை பட்டங்களையும் தாங்கிக் கொள்ளக்கூட உடலில் ஆற்றலில்லாதவராய் எலும்பும் தோலுமாக மெலிந்து கோட் ஸ்டாண்டில் அப்படியே தூக்கி மாட்டி விடலாம் போல அத்தனை ஒல்லியாயிருந்தார். தமிழை ஆங்கிலம் போலவும் ஆங்கிலத்தைத் தமிழ் போலவும் உச்சரித்துப் பேசினார் அந்தப் பேராசிரியர். அவரிடம் அரைமணி நேரம் உட்கார்ந்து உரையாடியதில் அவரை நன்றாக எடைபோட்டு முடித்துவிட்டான் அவன். அவரைத் தவிர இன்னும் மூன்று விரிவுரையாளர்களும் இரண்டு டியூட்டர்களும் ஏற்கெனவே அங்கே தமிழ்த் துறையில் இருப்பதாகத் தெரிந்தது. அவனுடைய புரொபஸ்ராகிய ஹெட் ஆப் தி டிபார்ட்மென்ட் கனமான சோடாப்புட்டி மூக்குக் கண்ணாடியை அடிக்கடி கழற்றிக் கழற்றி மாட்டிக் கொண்டே, 'யூ n, யூ n. என்று ஆரம்பித்துத் தப்பித் தவறி ஒரு தமிழ் வார்த்தை கூட வந்து விடாமல் ஆங்கிலத்தில் பொழிந்து தள்ளினார். அந்த அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது நாலைந்து கல்லூரித் தோழிகளுடனே பாரதி அந்தப் பக்கமாய் ஏதோ காரியமாய் வருகிறவளைப் போல் வந்து தான் அங்கிருப்பதைக் கவனித்துக் கொண்டு போனதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/240&oldid=595303" இலிருந்து மீள்விக்கப்பட்டது