பக்கம்:பொன் விலங்கு.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 O பொன் விலங்கு

அப்படிச் செய்ய நேர்ந்து அதனால் எல்லாருடைய கவனமும் சில விநாடிகள் தன் பக்கமாகத் திரும்ப நேர்ந்ததை எண்ணி நாணினான் சத்தியமூர்த்தி, ஒரு கூட்டத்திலிருந்து ஒருவனைத் தனியே பிரித்துத் தேர்ந்தெடுத்துச் செலுத்தப்படுகிற அன்பு அந்தக் கூட்டத்தின் நடுவே அவனுக்கே தண்டனைபோல் தோன்றும். சத்தியமூர்த்திக்கும் அப்போது அப்படித்தான் தோன்றியது. பரிமாறுகிறவனுடைய கவனத்தில் தான் தவறிவிட்ட அடுத்த விநாடியே பக்கத்தி லிருந்தவர்கள் கூடக் கவனித்துக் கண்டுபிடிக்கும் முன்பாக அந்தப் பெண் எழுந்து வந்த வேகம், அவள் அதைப் பெரிய இழப்பாக எண்ணித் தவித்துப்போய் ஓடி வருவதாகப் புலப்படுத்தியது. ஆனால், கல்லூரி நிர்வாகியின் ஒற்றைக்கொரு செல்வப் பெண்ணாகிய அவளே அப்படி எழுந்து வந்து பரபரப்போடு உபசரித்த காரணத்தினால் அந்த உபசரிப்புக்கு ஆளான சத்தியமூர்த்தியின் பக்கமாக மற்றவர்களின் பார்வை பொறாமை கால்கொள்ளும் குறிப்போடு சில விநாடிகள் திரும்பி நிலைக்கும்படி செய்துவிட்டாள் அவள். விருந்து முடிந்ததும் பூபதி ஆங்கிலத்தில் பேசினார். புதிய ஆசிரியர்களுக்கு நல்வரவு கூறி வரவேற்றும், பழைய ஆசிரியர்களை பாராட்டி நன்றி சொல்லியும், கல்லூரி வருங்காலத்தில் எதிர்பார்க்கிற இலட்சிய சாதனைகளை விளக்கியும், அழகியதொருசொற்பொழிவாற்றினார்.அவர். அதற்குப்பின்துணை முதல்வர் (வைஸ்-பிரின்ஸிபால்) புதிய ஆசிரியர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். அவரும் ஆங்கிலத்திலேயே பேசினார். அத்தனை பேர்களும் தமிழறிந்தவர்களாகவே இருந்துகொண்டு ஏன் ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் பேசிக்கொள்கிறார்கள்? என்றெண்ணி வியந்தான் சத்தியமூர்த்தி. அந்தரங்கத்தில் தாய்மொழியை அவமரியாதை செய்யும் அந்த நிகழ்ச்சிக்காக வருந்தவும் செய்தான். அந்த நிலையில் அவனே முற்றிலும் எதிர்பாராதவிதமாகப் பூபதி அவன் பக்கமாகக் கையைக் காண்பித்து, "இந்த ஆண்டில் புதிதாக வந்திருக்கும் ஆசிரியர்களின் சார்பாக என்னுடைய இளம் நண்பர் சத்தியமூர்த்தி சில வார்த்தைகள் பேசுவார்' என்று அவ்னை வம்பில் இழுத்துவிட்டார். சில விநாடிகள்தயங்கியபின்சத்தியமூர்த்தி பேசஎழுந்து சென்றான். பேசுவதற்குச் செல்லுமுன் தற்செயலாகப் பாரதியின் பக்கமாகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/252&oldid=595329" இலிருந்து மீள்விக்கப்பட்டது