பக்கம்:பொன் விலங்கு.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 251

சென்றது அவன் பார்வை. குழந்தைத்தனமான மகிழ்ச்சியோடும், ஆர்வத்தோடும் அவள் தன்னுடைய பேச்சை எதிர்பார்த்து மலர்ந்திருப்பதையும் அப்போது அவன் கண்டான். பெரியோர்களே நண்பர்களே சகோதரிகளே என்று தமிழில் அவன் தன்னுடைய பேச்சைத் தொடங்கியதும் கல்லூரி முதல்வர் அவசரமாக எழுந்து வந்து, ஆங்கிலத்தில் பேசுமாறு அவன் காதருகே முணுமுணுத்தார். ஆங்கிலத்தில் பேசுவதுதான் கெளரவம்' என்று வேறு வற்புறுத்தினார். அவருடைய முணுமுணுப்புக்கு மறுமொழி கூறிய சத்தியமூர்த்தி, அவருடைய . செவிகளுக்கு மட்டுமே கேட்கிறாற் போன்ற மெதுவான குரலில் அடக்கிக் கூறாமல் கூட்டத்திலிருந்த எல்லாருமே கேட்கும்படி இரைந்து கூறினான்: 'சார்.ஐ ஹானர்தி இங்கிலீஷ். பட் ஐ ஒர்ஷிப் தி டமில்" (நான் ஆங்கிலத்தை மதிக்கிறேன். ஆனால் தமிழை வணங்குகிறேன்) என்று அவரைக் குத்திக் காட்டும் பொருட்டு ஆங்கிலத்திலேயே அவருக்குப் பதில் கூறிவிட்டு "நம்முடைய கல்லூரி முதல்வர் அவர்களை அவமதிக்கக் கூடாதாகையால் அவருடைய கேள்விக்கு ஆங்கிலத்திலேயே மறுமொழி கூறிவிட்டேன். இனி இங்கே, கூடியிருக்கிற உங்களையும் நம்முடைய தமிழ்மொழியையும் அவமதிக்கக்கூடாதென் பதற்காகத் தமிழில் பேசுகிறேன். தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கிற உங்களுடைய கூட்டத்துக்கு நடுவே அதே மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிற நான் பேசும்போது, தமிழில் பேசுகிறது மன்னிக்க முடியாத குற்றமானால் போனால் போகிறதென்று நீங்கள் என்னை மன்னித்து வையுங்கள்.

'இந்த நூற்றாண்டில் ஆங்கிலம் மனிதனுடைய பொதுமொழி. தமிழ் தமிழன் மட்டுமே பேசுகிற மொழி. இந்தி இந்தியைப் பேசுகிறவனுடைய மொழி. ஆனால், ஆங்கிலம் எல்லோருக்கும் மொழியாகத் தக்க விதத்தில் புது யுகத்துக்கு ஏற்ற மனிதனின் உலக சமுதாயப் பொது மொழியாக இருக்கிறது. அதன் இடத்தை வேறொன்று நிரப்பவே முடியாது. ஆனால், அதற்காக நமக்குள் நாம் கூடப் பேசிக் கொள்ளும்போது தாய்மொழியைப் புறக்கணித்து, அந்தப் புறக்கணிப்பைச் செய்வதற்காகவே பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டியதில்லை. உலகத்தோடு பழகுவது ஒரு மனிதனுக்கு எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் வீட்டோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/253&oldid=595331" இலிருந்து மீள்விக்கப்பட்டது