பக்கம்:பொன் விலங்கு.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 253

ஒரு நாகரிகம். பிறருக்கு நம் மனத்தைப் புரிய வைப்பதே அதன் நோக்கமாயிருக்க வேண்டும். ஆங்கிலத்தையும் நீங்கள் குறைத்துச் சொல்லவில்லை. அதை 'மனிதனின் மொழி என்று அழகாகக் கூறினீர்கள். நீங்கள் கூறியதுபோல் அது உலகத்தின் சமுதாயப் பொது மொழி. அதனால் நிச்சயமாக இனிமேல் எந்தப் பிரதேச மொழியும் பாதிக்கப்பட்டு வலிமை இழக்காது. ஆனால் ஓர் உதாரணத்திற்குச் சொல்லுகிறேன்.வளர்ச்சியும் பக்குவமும்இல்லாதவேறு ஏதாவது ஒரு மொழி ஆங்கிலத்தின் இடத்தைக் கைப்பற்ற முயலுமானால் அது பல்வேறு மொழி இனங்களும் பிரிவுகளும் உள்ள இந்த நாட்டை உருக்குலைத்துப் பாழாக்கிவிடும். பல்வேறு மொழி இனங்கள் உள்ள இந்த நாட்டில் பழக்கவழக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமையைக் காப்பாற்றிவருவது ஆங்கிலம் ஒன்றுதான் என்பதை நீங்களும் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த நாட்டின் பழமையான பிரதேசமொழிகள் எல்லாம் பிழைத்து உயிர் வாழவேண்டுமானால் இனிமேலும் இங்கே ஆங்கிலத்தைக் காப்பாற்றினாலொழிய வேறு வழி இல்லை' என்றார் பூபதி. கல்லூரி முதல்வரின் முகத்தில் மட்டும் கடுமையும் வெறுப்பும் குடிகொண்டிருப்பதை சத்தியமூர்த்தி கவனித்தான். பலருக்கு முன்னால் எழுந்து நின்று பேச வாய்த்த முதல் சந்தர்ப்பத்திலேயே எல்லாருடைய சிந்தனையிலும் தான் ஒரு பிரச்சினையாகிவிட்டதை அவனே உணர்ந்தான். உங்கள் பேச்சு மிகவும் நன்றாக இருந்தது என்று அத்தனை பேருக்கும் நடுவே தேடிவந்து அவனைப் புகழ்ந்து விட்டுப் போனாள் பூபதியின் மகள் பாரதி, குறுகிய நோக்கமுள்ள சில பேராசிரியர்கள் அவனை வெறுப்புமிழுங் கண்களால் பார்த்து விட்டுப் போனார்கள். விருந்துக்கு வந்திருந்த பிரமுகர்களில் பலர், "அந்தப் பையன் யார் சார்?' என்று பூபதியிடம் அக்கறையோடு துண்டித் தூண்டி விசாரிக்கும்படி அமைந்திருந்தது அவன் பேச்சு. அந்த அரைமணி நேரப் பேச்சில் எல்லாருடைய கவனத்துக்கும் ஆளாகியிருந்தான் அவன். விருந்து முடிந்து அறைக்குத் திரும்பும்போது பாடனி விரிவுரையாளர் சத்தியமூர்த்தியோடு உடன் வந்தார். மறுநாள் முதற்கொண்டு சத்தியமூர்த்தியுடன் தாமும் அந்த அறைக்கு வந்து தங்கப்போவதாகக் கூறிவிட்டுச் சென்றிருந்தார் அவர். அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டுக் கல்லூரிக்குப் புறப்படத் தயாராக இருந்தான் சத்தியமூர்த்தி. காலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/255&oldid=595335" இலிருந்து மீள்விக்கப்பட்டது